Posts

Showing posts from December 7, 2010

எல்லாமுமாக என்னுள் நிறைந்த என் ஆயா சரோஜம்மா

Image
என் சரோஜம்மா எல்லாமுமாக என்னுள் நிறைந்த என் ஆயா என்னை தனியே விட்டு சென்றது ஏனோ ? உன்னில் மட்டுமே நான் பகிர்ந்த எண்ணங்கள் அதிகம் அதே போல தான் நீயும் .. சொல்லிய வண்ணம் நீ மண்ணாகி போனாய் எங்களை தவிக்க விட்டது போனதேன் ... நீ இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் கூட உன்னுடன் பேசினேனே அப்பொழுது கூட நான் உணரவில்லை நீ என்னிடம் மட்டுமே கூறியதை ... எங்களை காக்க அண்ணியை கொடுத்து விட்டு சென்று விட்டாய் உன் மனம் விருப்பத்துடன் ... உன் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளும் நானறிவேன் உன் அன்பால் உருவான நான் நிறைவேற்றுவேன் நீ விரும்பியவண்ணம் .. நீ மண்ணாகி போவதை பார்த்து கொண்டு மட்டுமே இருந்த இந்த பாவியின் உயிர் எண்ணங்கள் உன்னை சுற்றி கொண்டே இருக்கும் என்பதை நீயே அறிவாய் . ------------------------------------------------------------------------               எல்லாமுமாக என்னுள்   கலந்த என் சரோஜம்மா   நீ இல்லாத ஒரு நாள்   வருமென நான் எதிர்பார்க்கவில்லை ... உறவுகளின் வலிமையை இழப்புகளின் மூலம் உறுதி செய்கிறது என் பாட்டியின் மரணம்.... அனைவருக்க

உன்னை போல்

நீண்டதொரு பயணங்களில்   காலம் துவக்கிய கணத்தில்   முதல் முதலில் தோன்றிய எண்ணங்களின் மிச்சமாகிறேன் நான் .. கர்வமும் அகந்தையும்   நாளொரு தினமும் வளர்த்து   வருகிறது என் பொய்மையுடன் ... உண்மை நிலைகளில் எதுவும்   எஞ்சி இருப்பதில்லை என்னிடம் .... இந்நிலையே நானாகிறேன் உன்னை போல் ..                                                       -தி .ராஜேஷ்

என் பிரபஞ்சம் .

நான் கருதும் சிந்தனையே   என்னை வழி நடத்துகிறது ... அதையும் மீறியே எதிர்ப்பார்க்கும்   எண்ணங்களின் விளைவாக   செயலற்று அங்கயே நிற்கிறது .. எதிர்க்கொள்ளபோகும் சாவல்களை   கனவுகளோடு மோதாமல் செயலில் செய்யவே விளைகிறது   என் தூண்டு கோள்கள் ... வரும் முன்காக்க ஏற்பட   போகும் காயத்திற்கும் மருந்தாகிறது   என் பிரபஞ்சம் .. -தி .ராஜேஷ்

காலத்தின் விருப்பம்

புறந்தள்ளி போன நினைவுகளை   மீட்டு கொடுப்பதில் என் தனிமையின் விருப்பம் வலு சேர்கிறது ... அதன் நிலையிலே காலத்தின்   விருப்பம் மாறாதோன்றலில்   என் அணுவும் சோதனை செய்கிறது உன் நினைவு சோதனைகளில் ... காரணங்களை கலைந்து விட   சொல்லி ஆணையிட்ட கேள்விகளில் பதிலாக நிரம்பி உள்ளது என் தனிமைகள் ... துளைத்து எடுக்கும் வேதனையிலும் வலுவிழந்து நிற்கிறது உண்மை ...                                                   - தி .ராஜேஷ்  

உண்மையின் நிழல்

தனிமை உணர்வில் உளறுவதில்   கூட ஒரு வித வெறுமைவந்து தொற்றிக்கொள்கிறது என்னை ... யாரும் இதை கேட்கபோவதில்லை   என்ற நினைப்பில் என் மனதோடு பேசும் சுயத்தின் உண்மை   என்னை வெறுமையின்   பிடியில் தள்ளி விடுகிறது ... அதன் முனைப்பில்   காணமல்போகும் நான்   சில நிமிட உண்மையின் நிழல்   கூட பொய்மையை விட்டு வைக்காமல் மேலும் தனிமையின் துணைக்கு வலு சேர்க்கிறது என்னை வழி   நடத்தி செல்லும் என் பொய்கள் ...                                 - தி.ராஜேஷ்

கூற்றுகள்

நின்றழைக்கும் கூற்றுகள்   புறந்தள்ளி என்னை விட்டு ஓடுகிறது   தெரிந்த சுவடுகளை பின் தொடர்வது நம்பிக்கை தருகின்ற இனிய   நினைவாகவே உருவெடுக்கிறது ...   உண்மைகள் என்றுமே முதலில் உணர்ந்தது இல்லை நான்   பொய்மையும் எளிதில் என்னை நம்ப வைத்துவிடுகிறது ...                           - தி .ராஜேஷ்

தீர்மானிக்கபட்டவை

அனைத்தும் அறிந்திட ஆவலில்   முளைக்கும் கேள்விகளுக்கு   பதில் தெரியாமல் வழக்கம் போல் அமைதியாகுகிறேன் ... மனிதர்களை சார்ந்தே இங்கு   அனைத்தும் நிர்ணியக்கபடுகின்றன   வாழ்வை நிர்பந்தமாகவே எதிர்கொள்ள   பழக்கப்படுத்தி கொண்டேன்   மற்றவர்களை பார்த்தே..   அனைத்தும்  தீர்மானிக்கபட்டவையாகவே தோன்றுகிறது வாழ்வில் ....                                                     தி .ராஜேஷ்  

நிழல்

தீர்மானிக்கப்பட்ட தனிமை   தொகுப்புகளின் மூலம் தேடலில்   எங்கும் தாகம் தணிக்காமல் தகிக்க வைக்கும் வெறுமை   முற்று பெரும்காலத்தை வெறும் புறத்தால் தேடுவதில் பயனில்லை ... அகத்தின் ஒளியில் எங்கோ   ஒளிர்கின்ற வெளிச்சத்தின்   பரவலில் நிழல் காண்கிறேன்   தனிமைக்கு ஒளியேற்றிய   உன்னை என்றும் மறவேனே ..                       -தி .ராஜேஷ்

விருப்பம்

என் வரையறை வளர்த்து   கொள்ள பல வாய்ப்பாக அமைந்து விடுகிறது நான் படும் துயரத்தில் ... வலியின் விருப்பமும்   விலகி கொள்கிறது   நான் படும் இன்னல்களுக்கு ... எதையும் சார்ந்து வாழ்வது   வாழ்க்கை எனில் என்   தனிமையின்  விருப்பமாக வாழ்கிறேன் ..                  -தி .ராஜேஷ்

கனவு

முடிவில்லாத மீண்டும்   அதே கனவு நிலைகள் தொடர்கின்றன .. தினமும் என்னை   காண்பதற்கு அச்சப்படுகிறேன்   கனவின் விளைவுகளாய்.. கனவின் மீதங்கள்   மறுநாளின் ஆதிக்கமாய்   எங்கும் பரவி காணப்படுகிறது.. விடை தெரியாத   என் குழந்தை பருவத்தின்   தொலைத்த கனவுகளை   மீட்கும் விதமாக   மறுபடியும் இரவின்   உறக்கதில் நான். -தி .ராஜேஷ்  

அவசியங்கள்

காரணமின்றி முளைக்கின்ற   கேள்வியாகிறேன் பதில்களுக்கு .. புரிவதற்கான அவசியங்கள்   தேவைப்படவில்லை   மற்றவர்களுக்கும் எனக்கும் .. பொருட்படுத்தாத இயல்புகளை   மீறுகின்ற செயல்கள்  துளிர்விடுகின்றன ...   -தி .ராஜேஷ்  

ஒப்பீடுகள்

ஒப்பீடுகளின்   உணர்த்தப்படுத்தலாய்   விலகுகிறது என் இயலாமைகள் . உணர்தலும் நீள்கிறது .. அறியாமைகளின் ஆளுமைகள்   பற்றி கொள்ள   வேறொருவனை தேடுகிறது .. விலகி சென்றவை யாவும் நிலைக்கொள்ளாமல்   என்னுடனே சங்கமிக்கிறது . . -தி .ராஜேஷ்