Posts

Showing posts from December 8, 2010

தாங்கல் தெரு

Image
தாங்கல் தெரு எங்கள் ஊரில் அதிக அதிகாரம் படைத்த தெரு  (இன்று இல்லை ).வேலூர் மவாட்டத்தில் குடியாத்தம் தாலுக்காவில் வளத்தூர் கிராமத்தில் இருக்கின்ற தெரு தான் தாங்கல் தெரு .என் வீடும் இந்த தெருவில் தான் உள்ளது ..எதற்காக இந்த பெயர் என்று யோசிக்கையில் இதன் வரலாறு இடப்பெயர்ச்சியில் தொடங்குகிறது தாங்கல் என்ற ஊரில் என் முன்னோர்கள் வாழ்ந்த வந்தனர் அங்கு இருந்து இடம் பெயர்ந்து வளத்தூர் என்ற கிராமத்தில் கடைசியாக வந்தடைந்து அமைந்த பகுதி தான் தாங்கல் தெருவானது என செவி வழி செய்தியாக தலைமுறையாக எங்களுக்கு சொல்லி வந்தனர் ..இந்த தாங்கல் என்ற ஊர் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என் ஆயா சொன்னது ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமமாக இருந்திருக்கும் என்று ..இதை அறிவதில் அதிக முனைப்போடு எப்பொழுதும்  இருப்பது என் அண்ணன் தி .கார்த்தி மட்டுமே.  இந்த தெருவில் மொத்தம் இப்பொழுது பதினொன்று வீடு மட்டுமே உள்ளன இவற்றில் வசிப்பவர்கள் அனைவரும் உறவினர்களே  இந்த தெருவில் என் குழந்தை பருவத்தை மீண்டும் தேடுகிறேன் மீளா நினைவுகளின் உட்புகுதல் குழந்தை பருவங்களிலே தங்கி விடுகின்றன என்னை போல . ஒவ்வ