Posts

Showing posts from February 9, 2011

இருந்திருந்தால்

ஆண்டுகளின் துணையை ஆறுதலாகும் பிரிவு  கடந்து போகும்  மயக்கத்தை ஏற்படுத்த  அடுத்த ஆண்டின்  நுழைவின் கணம் வீட்டின் புதிய வரவால்  மனதை இலகுவாக்கிறது . கனிந்த நினைவை உனதாக்கிய நிறைவு  வழிந்தோடும் நேசங்களை  கோர்க்கப்படுகிறது  இச்சமயம் . நீயாகவே இருத்தலின்  உறுதியை  அண்ணன் அண்ணி  மூலமாகவே  நியாயப்படுத்த  அன்பினை எங்கும்  பரவிட அகமெங்கும்  இனிக்கிறது இக்கணமே . நீ இருந்திருந்தால் என்பதை  இல்லாமையால் கூறுவதை  என் நம்பிக்கையின்  சாரமாகவே கொள்கிறேன்  வளர்கின்ற நேசத்தில்  மெய்ப்பிக்கிறது உன் மறு வருகை . அரிதொரு பிணைப்பை  உணர்தல் இரவென்றும்  பாராமல் நினைவை மீட்ட  இசையாய் ஒலிக்கிறது  என் கனவில் .                         தி .ராஜேஷ் .