Posts

Showing posts from January 8, 2013

அந்நிழல்.

ஓர் நிழல் தன்னை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எதன் தொன்மையின் எச்சங்கள் அவை அதற்கென்று பல்நிலை  தன்மையின் உலகங்கள் இயங்கி கொண்டிருக்கிறது . வேரூன்றி உலவும்  நிழலில் என்னை ஆட் கொண்டிருக்கிறது காலத்தின் அசைவு அதன் கனவுகளாக என்னிடமே உலவுகிறது அந்நிழல் . இரவென்றும் பகலென்றும் ஏதும் பொருட்படுத்தாமல் தன்னை நோக்கியே வந்து கொண்டிருக்கிறது அந்நிழல் . அதனிடம் எதையாவது பகிர்வதற்கு எண்ணற்ற மன அடுக்குகள் நிறைந்து வைத்திருக்கிறது காலம் . நிழல் என்னிடம் ஏதும் கூறுவதில்லை அதன் இருப்பில் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது . அனைத்தின் கற்பனையின் ஆதியை மட்டுமே வழங்கி கொண்டிருக்கிறது . நினைவிற்கும் உண்டோ காலத்தின் நிழல் அவை தன்னின்  ஒளியின் கருவியாக்கி விட்டிருக்கிறது .                            -வளத்தூர் தி .ராஜேஷ் .

நிழல் கனவுகள் .

ஒளிர் புகும் வன்மம் நிறைந்த காலத்தின் நிழல் அச்சமூட்டுகிறது . தன் நிழல் வெளியிடும் விசையில் வீழ்ந்து கிடக்கிறது என் ஒளி . முன் இருப்பின் தொலைவில் நிகழின் பிம்பம் மேலும் கூச செய்கிறது . காத்திருப்பின் நிழல் பிம்பம் ஒருபோதும் நிர்பந்தங்களை எதிர்கொள்வதில்லை . என் பகிராத நிழலின் சொற்கள் காலத்தில் இறைந்து கிடக்கறது . தன் இரை தேடும் நிழலில் ஒளி வலி மிகுந்தது .                      -வளத்தூர் தி .ராஜேஷ்

கூற்றின் நிகழ்.

மன நீர்மத்தின் அகழியில் சுழன்று கொண்டிருக்கிறது என் நினைவுகள் . என் பிரிதொரு முகம் அணிந்து உலவும் பல்நிலை வன்மம் காத்திருக்கும் இரவில் ஈடேற்ற   தன் மனதை உடைத்தெறிக்கிறது. இனி வன்மத்தின் முகம் அணிந்து எங்கும் திரிய வேண்டியது தான் . சுய தேடலின் விளைவுகளை முன்னிலைப்படுத்துகிறது தன் அறியாமை . பிரபஞ்ச நகர்வின் இடப்பெயர்வில் எதை தான் அறுதியிட்டு கூறி கொண்டிருக்க முடியும் .  -வளத்தூர் தி.ராஜேஷ் .