Posts

Showing posts from August 7, 2011

மிகுதி-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை  http://puthu.thinnai.com/?p=3000   தன் எண்ணங்களில்  பிழைத்திருக்கும்  வார்த்தைகளை  வடிவமைக்கும்  நேரங்களில்  நிறைவு பெறுகிறது  என் மிகுதியான ஆசைகள் . அதன்  தொடர்ச்சியில்  எதனினும் விலகிடாத  ஒன்றிணைப்பு  காலங்களினால்  தீர்மானிப்பதில்லை  என் அன்பின்  மிகுதியாலே அறியப்படுகிறது . இன்னுமும்  எஞ்சி இருக்கின்ற  காரணங்களை  கரைந்து விட கூடிய  மித மிஞ்சிய  நினைவாகும்  காத்திருப்பை  அதனதன்  காலம்  மிகுதியாக  ரசித்து கொண்டிருக்கிறது . இதன்  விளைவாக  மாற்றியமைத்த  என் இறந்த கால  நிமிடங்கள்  நிறைவு தன்மையற்றவையாக  மிகுதியாகிறது. இறுதியில்  இயலாமை கொண்டு  எடுத்தாளப்பட்ட  நிர்பந்தங்களை  காலத்தை பழிக்க செய்யும்  மிகுதியான வாய்ப்பு  வழங்கியிருக்கிறது .                          -வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .