Posts

Showing posts from January 23, 2011

தனிமை

இயல்புகள் மீறுகின்ற செயலாய் என் தனிமைகள் அதன் விருப்பங்கள் போல் தன்னை அலங்கரித்து கொள்கின்றன ... சிந்தனையின் துணையும் இல்லையென்றால் கொடுமை தான் தனிமை ... ஆனாலும் மிகவும் நேசிக்கிறேன் என் எண்ணங்கள் இன்னும் விரிகிறது உன் இருப்பை போல என் பிரபஞ்சமே ... உன்னை சிறு வயதில் கொண்டே நேசிப்பதால் உன் எண்ணம் இன்றி வேறொரு எண்ணம் வந்தாலும் அனைத்தும் உன்னில் அடக்கமாகிறது என் தனிமையும் அதில் இருப்பதால் இன்னும் அதிகம் நேசிக்கிறேன் .. பிரபஞ்சத்தின் நினைவுகளில் நான் மறதியாகி போனாலும் என் தனிமையின் முழுவதும் உந்தன் நினைவாக எங்கும் நிரம்பி இருப்பாய்.. என் தனிமையை மிகவும் நேசிக்கிறேன் அவை உன் மூலம் பெறப்படுவதாலே ...            தி .ராஜேஷ்  .                      

நிகழாமல் இருக்க

இவையெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை . புரிதல்கள் கொள்ளாமலே  அன்பு வெறுப்புகளாக மாறும் வாய்ப்புகளை பெற்று தருகிறது உன் கோபங்கள் .. என் பேச்சுக்களை   அறிமுகம் செய்து விட்டு  முடிவுரையாக மாற்றுகிறாய் உனக்கான நியாயங்கள் தொடர்ந்து கிடைத்து விடுகிறது .. ------------------------------------------------------------------ உன் கோபங்களும் வெறுப்புகளும் தவறாக நினைக்கவும் நான் நேசித்த அன்பு கருதவதில்லை ... கருதுகிற நிலைமைகள் தொடர்ந்து வருவதில்லை என் பிம்பங்கள் கானல் நீராகவே உன்னிடம் தென்படுகிறது .. குழப்பத்தின் வெளிச்சம் குறைய தொடங்கியதும் நம் அன்பு நிலை என்றும் போல் நீடித்து நிலைத்திருக்கும் பிரபஞ்ச சக்தி போல் ..  --------------------------------------------------------------- நம் பிறிவு நிலைகளிலும் ஊடலின் தன்மை மிகுதியாகி நம் நினைவுகளுடன் பயணிக்கிறது காலம் .. மவுனங்களையும் நேசிக்க கற்று கொள்ள முடிகிறது என் தனிமைகளில்..  ------------------------------------------------------------------                                        தி .ராஜேஷ்