Posts

Showing posts from June 7, 2013

உன் அன்பின் நிறை .

முற்றும் உன்  நிகழ்வு தொன்மையின் இயல்பாய் தொடங்கியது . முன் நிகழ்ந்த யாவும் எவ்வித மாறுதலும் இன்றி இந்த பிரபஞ்சத்தை  தொடர்கிறது . உயிர் கொண்டிருந்த மூன்று மாத கரு எப்பொழுதும் மரணம் எய்துவதில்லை இல்லாமையின் இருப்பில் உன் நினைவின் அகாலம் அமரத்துவம் அடைந்த ஒன்று . விண்ணகி என மன ஒலி எங்கும் ஓலமிட்டு கொண்டிருக்கிறது விண்ணகி இயற்கை தன் நுண்ணிய பகிர்தலை அதன் காலத்தில் ரசித்து கொண்டிருக்கிறது . நீ வாழ்க விண்ணகி . விண்ணகி உன் தொன்மையின் சிறு நிழலில் உறங்கி கொண்டிருக்கிறேன் ஒளியை இன்னும் நிரப்பி கொண்டிரு கரைந்து கொண்டிருக்கும் தன் சுயத்தில் நீயே நிறைந்து கொண்டிருக்கிறாய் விண்ணகி நீ என் பிரிதொரு பிரபஞ்சம் . விண்ணகி என் மவுன அமைவில் இயங்கி கொண்டிருக்கும் உன்னிடம் எதுவுமே கேட்கபோவதில்லை நம் உணர்தலின் இறுதி அடைந்து விட்ட ஒன்று . விண்ணகி தன்னை மட்டுமே யாசித்து கொண்டிருப்பவனிடம் எதுவுமே எஞ்சி இருப்பதில்லை நீ மட்டுமே சுய உணர்தலாய் வந்தடைந்தாய் . உன் இருப்பின் அமைவில் எனக்காக காத்திரு விண்ணகி நம்  காலம் முடிவிலியால் ஆனது .                          உன் அன்பின் நிறை .