Posts

Showing posts from February 4, 2013

எல்லாமுமான என் ஆயாவிற்காக .

Image
எல்லாமுமான என் ஆயாவிற்காக . தன்  நினைவுகள் உன் காலத்தின் முடிவிலியில் தொடங்குகிறது. நினைவாய் உன் புன்னகையில் எஞ்சி இருப்பதை சேகரித்து கொண்டிருக்கிறேன் பிரபஞ்ச எதிர் காலத்திற்காக. உன் மவுனம் மட்டுமே என் நிறைவாய் நிறைகிறது . அதுவே என்னை வழி நடத்துகிறது . எங்கெங்கும்  உன் மன ஒலிகள் என்னை வந்தடைகிறது  மவுன சிறகில். அவ் உணர்தல் தனித்தன்மையுடன் பிரபஞ்சம் எங்கும் எதிரொலித்து கொண்டிருக்கிறது . அன்பின் ஆயா உன் நிழலில் ஆதியின் ஒளியினை வழிபட்டு கொண்டிருக்கிறேன் . உன் மறு வருகையை பிரபஞ்ச உணர்தலில் மகா இயக்கமாக்கு .                         வளத்தூர் தி .ராஜேஷ் .