Posts

Showing posts from July 22, 2011

விடை பெறுதல்

விடை பெறுவதற்கு  நான் யாரிடமும்  அனுமதி  கேட்கவேண்டியதில்லை  அப்படி யாரும்  இதுவரையில்  இருந்திருக்கவில்லை . இப்பொழுது ஏன்  விடை பெறுதல்   அவசியமாகிறது என்றால் என்னிடமான சுயத்தின்  மவுனம் தாங்கி  கொள்ள முடியாமல்  இருப்பதால் . அதன் கனமேற்றத்தின்  அழுத்தங்கள்  என்னை எப்பொழுதும்  சோதித்து கொண்டிருப்பதால் . என்னை தன்  நீர்மம்  நிறைந்த பொருளாக  மாற்ற முயல்வதால் . என்னை தன் மகிழ்வின்  மீது அமர வைப்பதினால்  விடை பெறுதல்  மனதின்  அனைத்துமான ஒன்றாக இருக்க  வேண்டும் . அதன் நிலையிலே  முதன் முதலாக  தன் சுயத்தினை  பார்க்க  விடை பெறுதல்  பெறுவதற்கு  நான் யாரிடமும்  அனுமதி  கேட்கவேண்டியதில்லை  அப்படி யாரும்  இதுவரையில்  இருந்திருக்கவில்லை .                               -வளத்தூர் .தி.ராஜேஷ் .

குற்றங்கள்-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=2611 குற்றத்தினை கையாள்வது  மிகவும் அசாதரமானது  ஆனாலும்  அனைவரும் எளிதாக  கடந்து விட கூடிய  இயல்பாகி விட்டது . குற்றங்கள் எப்பொழுதும்  தனித்து விடப்பட்ட  தன்மையை  பெற்றிருப்பதால்  அதனை  நீங்களும் நானும்  அறிந்திருக்க வாய்ப்பில்லை . எந்தன் குற்றத்தினை  உங்களின் குற்றங்களுடன்  இப்பொழுது  சேர்த்து கொள்கிறேன்  நீங்கள் எதுவுமே  கேட்கப்போவதில்லை  அதற்கான அவசியம்  என்றுமே  இருக்கப்போவதில்லை . உணர்த்துவதற்கு என்று  படைக்கப்பட்ட மனம்  தொலைந்து விட்டதை  குற்றங்கள் மட்டுமே  அறிந்திருக்கிறது . நானும் நீங்களும்  ஒன்றிணைப்பது  மனித உயிரினத்தால்  அல்ல  குற்றங்களினால் .                       -வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை,நண்பர்களுக்கு