விடை பெறுதல்

விடை பெறுவதற்கு 
நான் யாரிடமும் 
அனுமதி 
கேட்கவேண்டியதில்லை 
அப்படி யாரும் 
இதுவரையில் 
இருந்திருக்கவில்லை .

இப்பொழுது ஏன் 
விடை பெறுதல்  
அவசியமாகிறது என்றால்
என்னிடமான சுயத்தின் 
மவுனம் தாங்கி 
கொள்ள முடியாமல் 
இருப்பதால் .

அதன் கனமேற்றத்தின் 
அழுத்தங்கள் 
என்னை எப்பொழுதும் 
சோதித்து கொண்டிருப்பதால் .

என்னை தன்  நீர்மம் 
நிறைந்த பொருளாக 
மாற்ற முயல்வதால் .

என்னை தன் மகிழ்வின் 
மீது அமர வைப்பதினால் 

விடை பெறுதல் 
மனதின் 
அனைத்துமான
ஒன்றாக இருக்க 
வேண்டும் .

அதன் நிலையிலே 
முதன் முதலாக 
தன் சுயத்தினை 
பார்க்க 

விடை பெறுதல் 
பெறுவதற்கு 
நான் யாரிடமும் 
அனுமதி 
கேட்கவேண்டியதில்லை 
அப்படி யாரும் 
இதுவரையில் 
இருந்திருக்கவில்லை .
                              -வளத்தூர் .தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு