Posts

Showing posts from November 3, 2011

படிமங்கள்-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=5374 என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை ஆக்குவது என்பதில் பெரும் போட்டிகளும் போராட்டங்களும் நாளும் நடைபெறுகின்ற இயல்பாகிறது . புதிய படிமங்கள் தோன்றுவதில் பழையனவை ஆதங்கம் கொள்கின்றன தான் இன்னும் கீழே செல்கிறோம் என்று அவை இன்னும் தொன்மையாகிறது என்பதை அறியாமை உடையவானகிறது . நிறங்களின் தன்மையை மேலும் கூட்டுகிறது இதன் உருவங்கள் பார்பதற்கு இன்னும் நிகழ்வு நடைபெறவில்லை அதனை நோக்கியே முனைப்பும் அடிகோலுகிறது . -வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு