Posts

Showing posts from July 5, 2011

வலிகளின் நிலையில்லா தன்மை.

Image
மிகவும் எளிதாக  அனைவரும்  உணரக்கூடிய  வலியொன்று  அழுத்தத்தின்  இயல்பை  மீறப்படும் செயலாய் என்னால்  இயற்றப்பட்டது  நேற்று . என் இயக்கங்களின்  வழிந்தோடும்  பிரபஞ்ச நேசங்களை  எடுத்துக்காட்டாய்  விபத்தொன்று  இனிதே  நடந்தது . சில விபத்துகள்  ஏற்படும் பொழுது  பழியை எளிதாக  சுமத்த அமைகிறது  தன் கவன குறைவு . பரவுகின்ற எரிச்சல்  உடலின் வலிகளை  பற்றிக்கொண்டு  பழைய வன்மங்களை  நினைவூட்டுகிறது . பிதற்றப்படும் வலி முனங்கள்  ஆயா,அம்மா ,அப்பா  தாண்டி பிரபஞ்ச  எண்ணத்தில்  ஒன்றிணைத்தது . நட்பின் துணையை  ஹரிஹரன்  மெய்ப்பித்தான்  விழியோடு பேசும்  நம்பிக்கை வார்த்தைகளை  வலிகளின் மீது  தூவினான் . துடித்த மனதின்  முதல் தேடல்  என் ஆயாவாக  இருப்பதில்  இருப்பின் விதையில் ஆறுதல் அடைய  செய்தது . காயத்தின் வலிகளின்  மீது எப்பொழுதும்  நிலையில்லா தன்மை  ஊடுருவுகிறது . பிரபஞ்ச உணர்வு  உறவினர்கள்  நண்பர்களின் ஆறுதல் சற்று பாதுகாப்பு  மேகமாய் பரவ  அவ்வபொழுது  உறக்கம் விழிப்பு  நிலையிலே வைத்திருக்கிறது .                         -வளத்தூர் தி .ராஜேஷ் .    

தனித்திருப்பதன் காலம்-திண்ணை

June 19th, 2011  திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=1498   இப்பொழுதைய இந்த தனிமை நிமடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் . தனித்திருப்பது ஒன்றும் ஆபாயகரமனது அல்ல கால சிந்தனை முறையை அதனதன் நிறைவை நிகழ செய்யும் ஒன்றினை எப்பொழுதும் செய்ய விட்டதில்லை காலம் . சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் முடிச்சுகளை தனிமையின் ஏதோ ஒரு நொடிகளும் அதன் காலமும் விடுவிக்க காத்திருக்கிறது . காலத்தின் இயக்கம் நடைபெறாத ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறது வெற்றிடத்தின் விசை பரவல் . அதன் நொடிகளின் இடப்பெயர்வு நினைவலைகளை சிதறடிக்கிறது . எதிர்ப்படுதலில் எந்தன் மையநோக்கு விசை குறிக்கப்படுகிறது விலகிய கோணம் மாற்றியமைக்கப்படலாம் . உணர்த்தும் விசையின் இயக்கம் விடுப்படுகிறது ஈர்ப்பின் மையமாக மாறுகிறேன் விசையில் கரைகிறேன் . இப்பொழுது காலத்தின் அமைவில் என்னை காண்பதற்கு பதிலாக உணர மட்டுமே முடிகிறது . -வளத்தூர் தி .ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை மற்றும் நண்பர்களுக்கும் .