Posts

Showing posts from December 7, 2011

நிர்ணியக்கும் சாத்தியக்கூறுகள்.-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை  http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5080 தன்னை நிர்ணயிக்கும் சாத்தியக்கூறுகள் உங்களிடமிருந்து பறிக்கும் பொழுது அடங்குதல் முற்றுப் பெறுகிறது . தோன்றிடாத சிந்தனையின் சாயல் எல்லாவற்றின் மீதும் பூசப்படுகிறது நம்பவைக்கவும் உறுதி கொடுக்கப்படுகிறது. இதில் நீங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள் சுயத்தின் அலறல் இப்பொழுது நீங்கள் கேட்டு விடக் கூடும் அச்சமும், தயக்கமும் உங்கள் மீது தெளிக்கப்படுகிறது. வருந்தும் காரணங்கள் பறிக்கப்படுகின்றன திணிக்கப்பட்ட மகிழ்வை எவ்வளவு காலத்திற்கு சுமக்க வேண்டியிருக்கும் என்ற சந்தேகம் மேலோங்குகிறது . வழிவகை உண்டென சுயத்தின் ஒரு குரல் கேட்கிறது தன் செயல்கள் மெய்ப்பிக்கும்மாறு அதற்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டன.      வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .

வாழ்வியலின் கவன சிதறல்-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=6655 விதைத்து விட்டிருக்கும்  வாழ்வியலின்  கவன சிதறல்  ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது . மூன்றாம் வயதின்  நினைவின் மீது  இக்கணம் அமர்ந்திருக்கிறேன் . அப்பா மளிகை கடை  கொண்டிருந்த காலம்  தினமும் முத்தங்களும்  ஐந்து காசும் ,பத்து காசும்  கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும்   நினைவுகளும்  அறிவதற்கில்லை  நாங்கள் பெற்றிருந்த  அகமகிழ்வை. பின் காலத்தின்  பயணம் தொடங்கியது  அனைத்தும் நின்றது . வேறு வகையின் பயணம்  இனிதே தொடங்கியது . குத்தகை நிலமொன்று  இருந்த காலம்  அப்பாவின் வண்டியும் தான் .  மூவரையும் அதிகாலையில்  அழைத்து செல்வதில்  இன்பகாற்றை இன்னும்  உயிர்ப்புடன் சேகரித்து  வைத்திருக்கிறேன் . காலம் தன் பயணத்தை   மீண்டும் புதிய விதமாக  இயக்கியது . குத்தகை நிலம்  கை விட்டு போனது  உழைப்பின் நிழல்  மெல்ல படருகிறது  எங்கள் மூவரின் மீதும்  ஒரே புகலிடம்  இரவி மேட்ச் ஒர்க்ஸ் . கனவுகள் வேகமாக  வளருகிறது  காலத்தின் தொன்மையும்  கூட விட்டு வைக்கவில்லை  தொலைவுகள் . அப்பாவின் ஆற்காடு  கேஷியர் வேலை  அம்மாவின் முதல்  கண்ணீரை பார்த்த  தருண