Posts

Showing posts from December 29, 2010

இரை இங்கு இதில் அவசியமாக்கப்படவில்லை.

தன்னை அறியாது செய்கை  அச்சத்தின் கொடூரத்தில்  அங்குமிங்கும் அலைகிறது  வேட்டையின் பிரதிபலிப்பு  இதிலும் காண கிடைக்கிறது  துரத்தல் நின்றபாடில்லை  இரை இங்கு இதில்  அவசியமாக்கப்படவில்லை... முரணில் வளர்ந்து நிற்கிறது  செயல்பாடுகள்  விடுமென மீறுவதில்  முனைப்பாகிறது பயணம்  வென்றுவிட்ட பொருளின்  எதிலும் இயலாமையின்  உருவம் கொண்டே திரிகிறது.. மாய்த்து கொண்டிருக்கும்  தோல்விகள் சிறிது  ஓய்வை  பெறுகின்றது.. வேட்கையின் தீவிரம்  உறுதியிட்டு அழைக்கிறது  கேட்கும் ஒலியை  பறைசாற்றுகிறது  வெற்றியின் ஆராவாரம்..                             தி .ராஜேஷ் .  

தவறின் பிழைகள்.

முற்றிலும் முறிந்து விட்ட நிலையை  உணர வைத்து கொண்டிருக்கிறது  தவறின் பிழைகள் ... சரியென்று ஏற்றுகொள்வதில்  மனம் தவித்தாலும்  நிர்பந்தத்தின் கட்டாயம்  அமைதியின்மையை நாளும் உருவாக்குகிறது ... தவறென்று ஒதுக்கி விடுவதில்   எளிதாக இருந்தாலும்  ஏற்றுகொள்வதற்கு  அகத்தின் உருவாக்கங்களின்  அலறல் ஒலி ஓய்வின்றி  எதிரொலிக்கிறது ... உணர்த்தும் பிழை காலத்தை  கடத்தி செல்கின்ற கருவியாகவே  செலுத்தப்படுகிறது ... உள்ளத்தின் அலறல்களை  மவுனத்தை கொண்டு பயிற்றுவிக்கிறேன் அடங்குதலில் முறையிடுவது  காற்றின் உருவம் போன்றதாகிறது ...                                               -தி .ராஜேஷ் 

வறைமுறைகள்

நேசங்களின் மிகுதியில் அனைத்தும் மீறப்படுகிறது வறை முறைகள் வார்த்தைகளின் வெளிப்பாடுகள் மீள்வதில் துடிக்கின்றன .. சொற்களின் உறவாடுதல் நம்பிக்கையின் விளம்பில் தொற்றிக்கொண்டிருகிறது ... வருகின்ற காலங்களில் முன்னோர்கள் விட்டு போனவற்றை நியாயப்படுத்த நிர்பந்தங்கள் வேருன்றி இருக்கிறது ...                                     - தி .ராஜேஷ் 

வன்மம் குடிபுகுதல்

இன்றைய நாட்களை   மூன்று ஆண்டுகளின்   நினைவின் பெரும் நிகழ்வுகள்   உள்ளடைக்கியது .. நேசங்களில்   விட்டு கொடுப்பவை   பரிமாற்றத்தின்   பசுமைகளாக   நிறைவு தன்மை   உடையவை .. கணத்தின் மேன்மை   கூடுகிறது அவை   பெறுவதால் மட்டுமே   விலகுதல்   நியாயமாகாது .. அன்பை உள்ளத்தில்   பரவி சென்றதால்   மறைவதும் மறைத்தலும்   உனக்கு விளையாட்டானது ..   எதுவாக நினைப்பினும்   நான் கொள்ளும் அதே   நிலையை நீயும்   பெறுவாய் என்பது   அறிவீனமே .. யாருக்கும்   கிடைக்கபெறாத   சூழலை நமக்காக   உருவாக்கினாய்   அனுதினமும் வலிகளை சோதனையை செய்யும்   வன்மம் குடிபுகுதலில்   புரிதல் கூட   நிலையில்லாமையில்   தடுமாறுகிறது .                          தி . ராஜேஷ்