Posts

Showing posts from December 5, 2010

பிரபஞ்சத்தின் இயக்கம் .

நினைவுகள் நினைக்கப்படும்   தொகுப்புகளாக உறைந்து  உறங்கி கொண்டிருக்கிறது .. எதை முன்னிலைப்படுத்துவது   என்பதன் தீர்மானம் எடுக்கும் முடிவு   சூழ்நிலைகளும் சிந்தனையுமே தீர்மானிக்கிறது .. மூன்று காலங்களின்   கோர்வைகளாக கற்பனையின் அகழியில் வீழ்ந்து கிடக்கிறது  நினைவுகள் .. இழப்புகளின் நினைவுகள்   இருப்புகளாகவே பதிவு  செய்து விடுகிறது .. தொடரும் ஏக்கங்கள்  தனிமையின்   நினைவாக  உருவாக்கப்படுகிறது .. நேசங்களின் நினைவுகள்   மனதின் வலிகளை  குறைக்கிறது .. தொடர்ந்து வரும் இன்பங்கள்   நீடிக்கவே நினைவுகள் விரும்புகிறது ... மாற்றமாகி விடுகிறது   நிகழ் கால நினைவுகள் கடந்த கால நினைவுகள்   சாட்சியாகி மட்டுமே  உறுத்துகிறது   வரும் கால நினைவுகள்   கனவுகளாகவே பார்க்கபடுகிறது .. அனைத்து நினைவுகளும்   என் உயிர் பிரபஞ்சத்தின்  இயக்கத்திற்கு   அருகிலே பயணிக்கிறது .                                    -தி.ராஜேஷ்  

மனதின் சுயப்பரிசோதனைகள்

நிலைக்கின்ற  சலனங்களில்   சரிந்து வீழ்கிறது   என் மனதின்  நோக்கங்கள் .. கீழே வீழ்ந்து   கொண்டிருக்கும்   என் எண்ணங்களை   மறுமதிப்பீடு செய்கிறது   என் செயல்கள் .. மனதின்   சுயப்பரிசோதனைகள்   வலுப்பெறுகிறது .                      -தி .ராஜேஷ்

தனிமை நிலைகளில்

என்றாயின் நான் காணும்   சுயங்களில் நியாயப்படுத்தும்   என் விருப்பங்கள் . நிர்பந்தங்களின் ஆளுமைகள் நீள்கிறது மற்றொருவனை நோக்கி .. அன்பாய் பரிணமிக்கும் எந்தன்   தனிமை நிலைகளில் பெறுகின்ற   யாவும் விரும்பப்படுகிறது   அதனதன் இயல்பில்.. எந்தன் உருவாக்கத்தின்   எதிர்ப்புகள் அனைத்தும்   முறைப்படுத்தப்படுகின்றன   நேசங்களின் விருப்பங்களாக தொடர்கிறது காலங்கள் ..                                 - தி.ராஜேஷ் .

வீழ்ந்து கொண்டிருக்கும் இயலாமை

நான் புனிதத்துவம்  என்று கருதும் அனைத்தும்  ஒவ்வொன்றாக என் வெறுமையில்  விழுந்து கொண்டிருக்கிறது ... நான் கருதிய கருதுக்கோள்கள் பின்பற்றப்பதுவதில் நிரபந்தம் எதும் இன்றி தவிக்கிறது உணர்வுகள் ... என் அனைத்து அளவீடுகளும் நிறுத்தம் இல்லாமல்  உருவாக்குகிறது  அடுத்த கட்ட சிந்தனைகளுக்கு .                                 -தி .ராஜேஷ்

கரை சேரா படகுகள்

மீளா நினைவுகளின்  உட்புகுதல் குழந்தை  பருவங்களிலே  தங்கி விடுகின்றன.. கரை சேரா நிலையில்  என் தவிப்புகள் வேடிக்கை காட்டும் படகாகிறது. மாறுதலின் நிலை  மறுத்தல் ஆன பின்  இன்னுமும் விட்டு வைத்திருக்கிறது  காத்திருத்தல் ..                     - தி .ராஜேஷ்

தோன்றலின் இருப்பிடம்

உறவின் கணத்தலில்  இலகுவாகிறது உள்ளம்  போதாமல் நிகழ்கிறது  நினைவின் இருப்பு  நெருங்குகின்ற தவிப்பு  சொல்லாமலே செல்கிறது  கேட்பதற்கு இல்லாமையால்  பகிர்வதற்கு  நிறைய இருக்கிறது  வீட்டின் ஒவ்வொன்றிலும்  நம் பேச்சுக்கள் கேட்பதற்கு காத்திருக்கிறது .  யாவும் என் ஆயாவின்  தோன்றலின் இருப்பிடம்  இல்லாமலே பயணிக்கிறது  என் வாழ்வு .                                  தி .ராஜேஷ் .

மறைக்கப்படும் நினைவுகளில்

உன் சிறு சிறு மாறுதல்களில் மாறுகிறேன் மாற்றங்களாய்.. உறைந்த நினைவுகளில் கரைகிறது நிகழ்வுகள்.. நான் கொண்ட மறுப்புகள் அனைத்தும் மாய்த்து கொள்ள துடிக்கின்றன உந்தன் விருப்பங்களாக.. மறைக்கப்படும் நினைவுகளில்  மறுக்கப்படுவதில்லை  நம் அன்பு நிலை .                        -தி .ராஜேஷ் .

தோழியே

எப்பொழுது தோழியே உன்னை நான் சந்திதேன் முதன் முதலில் ... நினைவில் சிந்திக்க முடியாத காலங்களில் என்றேனும் ஒரு கணம் உன்னை கண்டேனோ ? அதன் வினை இன்றும் தொடர்கிறது நம் நட்பில் ... உன்னை காணமல் ஒன்பது வருடங்கள் ஆயினும் ... மாறாமல் மறக்காமல் உன் அன்பில் வாழும் நம் நட்பு ...... என்றேனும் ஒரு நாள் நாம் சந்தித்தால்.. விலகி சென்ற நிமிடங்கள் மீண்டும் நம் அன்பில் பூரணமாகும் நம் நட்பு ... நான் பார்க்கும் கேட்கும் நல்லவை அனைத்திலும் நீயாகவே உருமாருகிறாய் .. நம் அன்பும் நட்பும் நம் மதங்கள் பிரிக்கவில்லை மாறாக வளர்ந்தது மனித நேயமாக .... உன்னை நினைக்கும் நினைவுகளே என்னை இன்னும் வாழ சொல்கிறது என் நட்பை தேடி ..                                      -தி .ராஜேஷ்   

வன்மம் குடிபுகுதல்

இன்றைய நாட்களை  மூன்று ஆண்டுகளின்  நினைவின் பெரும் நிகழ்வுகள்  உள்ளடைக்கியது .. நேசங்களில்  விட்டு கொடுப்பவை  பரிமாற்றத்தின்  பசுமைகளாக  நிறைவு தன்மை  உடையவை .. கணத்தின் மேன்மை  கூடுகிறது அவை  பெறுவதால் மட்டுமே  விலகுதல்  நியாயமாகாது .. அன்பை உள்ளத்தில்  பரவி சென்றதால்  மறைவதும் மறைத்தலும்  உனக்கு விளையாட்டானது .. எதுவாக நினைப்பினும்  நான் கொள்ளும் அதே  நிலையை நீயும்  பெறுவாய் என்பது  அறிவீனமே .. யாருக்கும்  கிடைக்கபெறாத  சூழலை நமக்காக  உருவாக்கினாய்  அனுதினமும் வலிகளை சோதனையை செய்யும்  வன்மம் குடிபுகுதலில்  புரிதல் கூட  நிலையில்லாமையில்  தடுமாறுகிறது .                         -தி.ராஜேஷ் .

என் பொய்கள்

தனிமை உணர்வில் உளறுவதில் கூட ஒரு வித வெறுமை வந்து தொற்றி கொள்கிறது என்னை  யாரும் இதை கேட்க போவதில்லை என்ற நினைப்பில் என் மனதோடு பேசும் சுயத்தின் உண்மை என்னை வெறுமையின் பிடியில் தள்ளி விடுகிறது ... அதன் முனைப்பில் காணமல் போகும் நான்  சில நிமிட உண்மையின் நிழல் கூட பொய்மையை விட்டு வைக்காமல் மேலும் தனிமையின் துணைக்கு வலு சேர்க்கிறது என்னை வழி நடத்தி செல்லும் என் பொய்கள் ...                                 -தி .ராஜேஷ்   

தன் வெறுப்புகளின் முன்மொழிதல்

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3606 முதன் முதலாக என் கவிதை உயிரோசை இணைய இதழில் வெளியானது மிகவும் அளவற்ற மகிழ்வான தருணம் இவை . உயிரோசை இணைய இதழுக்கு நன்றி .. நான் பெரும் இகழ்ச்சிகளில் வேதனையின் சிதறல்கள் ஒளி இழந்து காட்சியளிக்கிறது . வருத்தம் கொள்ளும் வாய்ப்புகள் என்னைச் சுற்றி அதிகமாகவே சூழ்ந்துள்ளது .. தடுமாற்றங்களின் வெளிப்பாடு சலனமின்றிப் பரிணமிக்கிறது பிரிவின் நேசங்களைத் தாங்கிக் கொண்டு .. நிர்ப்பந்தங்கள் என்னில் நீடிக்கும் வரையில் பின்பற்றப்படுபவை தொடர்ந்து விடுகிறது எத்தகைய நிலையிலும் .. துளைத்து எடுக்கும் தன் மோதலை எங்கும் பரப்பிச் செல்கிறது புலம்பலான சிந்தனைகள் .. முதன் முதலாக நியாயப்படுத்திக் கொண்டது பல நிலைகளுடைய தன் விருப்பங்கள் .  விடைபெறுகின்ற இறுக்கம் மீண்டது நம் தயக்க நிலைகளில் வெறுப்புகளைக் கடந்து முன்மொழிகிறது பேச்சில் ..                               -தி.ராஜேஷ் 

மீள்வதற்கான வகைகள் .

உருவாக்குதலின் வெளிப்பாடு  விளைவை எதிர்கொள்ளாமல்  வலிமையை மேலும்  வலு சேர்க்கிறது.. பின்பற்றப்படுபவை  ஒரு நிலைக்கு மேல் நிர்பந்தமாகவே  மாறி விட துடிகின்றன.. நோக்கங்கள் வரையறையின்றி  நீட்டிக்கப்படுகிறது  நிகழ்வின்  அனுமானங்களை  செதுக்க.. இறுதியில் விட்டு  போனவைகளை  குலைக்கும் விதமாக  சிந்திக்கப்படுகிறது ... மீள்வதற்கு வகைகள்  உண்டென நம்பிக்கையை  உதாரணமாக்குகிறது  முயற்சிகள் ..                        -தி .ராஜேஷ் .

அவமதிப்பு

நெறிகளை உள்ளடக்கிய  நோக்குதல் நெருங்குகிறது கூக்குரலிடுவதன் முனைப்பில்  ஒலிகள் விழுங்கப்படுகிறது. ஊடுருவல் அனைத்தும்  அறிந்துள்ளவை மட்டுமே  நியாயப்படுத்த  முடியும் .. வழிமொழிகின்ற தவிப்பை  நிகழ்வை கடந்தும்  அனுமானங்களின் மிச்சங்களாக   இன்னும் உளறுகிறது .. அகழியில்  விழுந்த   செயல்களை மீண்டெழும்  சாத்திய கூறுகளை  முன்னெடுக்கிறது  அவமதிப்பு ... உள்ளத்தின் மவுனம்  கொண்டு  புறக்கணிப்பின் நிலையை  கடந்து விடுகிறேன்                        -தி .ராஜேஷ் 

என் படிமங்கள்

என் படிமங்கள்  ஒவ்வொன்றாக  அலங்கரிக்கப்படுகின்றன  அதன் கட்டமைப்பு  மிகவும் தொன்மையானவை  உலகில் தோன்றிய  முதல்  உயரின்  மிச்சங்கள் இதிலும்  இருக்கிறது .. படிமத்தின் அசைவுகளை  உன்னிப்பாக கவனிக்கிறேன்  அவையே என்னை  தீர்மானிக்கின்றன  எதை முன்னிலை  ஆக்குவது என்பதில்  பெரும் போட்டிகளும்  போராட்டங்களும்  நாளும் நடைபெறுகின்ற  இயல்பாகிறது ... புதிய படிமங்கள்  தோன்றுவதில்  பழையனவை ஆதங்கம்  கொள்கின்றன  தான் இன்னும்  கீழே செல்கிறோம்  என்று  அவை இன்னும்  தொன்மையாகிறது என்பதை அறியாமை  உடையவானகிறது ... நிறங்களின் தன்மையை  மேலும் கூட்டுகிறது   இதன் உருவங்கள்  பார்பதற்கு இன்னும்  நிகழ்வு நடைபெறவில்லை  அதனை நோக்கியே  முனைப்பும்  அடிகோலுகிறது ...                                       -தி.ராஜேஷ் .

மீட்கப்படும் சந்தேகங்கள்

மீட்கப்படும்  சந்தேகங்கள் வலுப்படும் பொழுது  கணத்தின் சூழல்  உறுதியாகிறது .. எழுகின்ற கேள்விகளை பதிலின் இகழ்வை பொருத்து கொள்வதென  உரிமை மீறுகிறது .. பொருளின் முக்கியத்துவம்  உணர்வை மழுங்கடிக்கும்  ஆயுதமாகவே கருத  வேண்டியிருக்கிறது .. எளிதில் வெட்டுப்படும்  ரணத்தில் இன்னும்  குருதி வழிந்தோடுகிறது  அவை தீர்ந்து போனாலும்  அணுக்களின் இயக்ககங்கள்  நீண்டு கொண்டே தான்  இருக்கிறது ..                             -தி .ராஜேஷ் .