Posts

Showing posts from May 4, 2014

கால நினைவுகள்

Choice is yours அப்பாவிற்கு மிகவும் பிடித்த அடிக்கடி உச்சரித்த வார்த்தை .எங்கள் வாழ்வில் அனைத்தின் முடிவுகளையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிறு வயதின் முதலே பழக்கப்படுத்தி விட்டார் இன்றும் அது தொடருகிறது . இது வரையிலும் எவ்வித திணிப்பையும் எங்கள் மீது செலுத்தியதில்லை அவ்வித சுதந்திர அன்பில் திளைத்திருந்தோம். அப்பாவிற்கு ஐம்பத்தி ஒன்பதாம் பிறந்த நாளன(MAY-1) இன்று என் நினைவின் பகிர்தலையே வாழ்த்துகளாக உருமாற்றுகிறேன். ----------------------------------------------------------------------------------------   அப்பாவிடம் என் முரண்கள் அதிகம் இருந்த காலமும் உண்டு . இதனாலே வீட்டை விட்டு இரண்டு முறை ஓடி போயிருக்கிறேன் (நடந்து தான் சென்றேன்) சில மாதங்களாகப் பேசாமலும் ஊருக்குச் செல்வதுமில்லாமல் இருந்தேன் . அப்படிப் பட்ட நாட்களில் என் அன்பு மேலும் மனதை இறுக்கியது . அப்பாவிடம் பிடிக்காத விஷயம் குடியும் ,புகையும் தான் . இப்பொழுது குடியை விட்டு ஏழு வருடங்களுக்கு மேல் இருக்கும் . குடித்து விட்டு இரவு முழுவதும் விடிய விடிய பேசி கொண்டே இருப்பார் . அப்பாவின் பகிர்தல் அனைத்தும் கடந்த