கால நினைவுகள்

Choice is yours அப்பாவிற்கு மிகவும் பிடித்த அடிக்கடி உச்சரித்த வார்த்தை .எங்கள் வாழ்வில் அனைத்தின் முடிவுகளையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிறு வயதின் முதலே பழக்கப்படுத்தி விட்டார் இன்றும் அது தொடருகிறது . இது வரையிலும் எவ்வித திணிப்பையும் எங்கள் மீது செலுத்தியதில்லை அவ்வித சுதந்திர அன்பில் திளைத்திருந்தோம். அப்பாவிற்கு ஐம்பத்தி ஒன்பதாம் பிறந்த நாளன(MAY-1) இன்று என் நினைவின் பகிர்தலையே வாழ்த்துகளாக உருமாற்றுகிறேன்.
----------------------------------------------------------------------------------------

 
அப்பாவிடம் என் முரண்கள் அதிகம் இருந்த காலமும் உண்டு . இதனாலே வீட்டை விட்டு இரண்டு முறை ஓடி போயிருக்கிறேன் (நடந்து தான் சென்றேன்) சில மாதங்களாகப் பேசாமலும் ஊருக்குச் செல்வதுமில்லாமல் இருந்தேன் . அப்படிப் பட்ட நாட்களில் என் அன்பு மேலும் மனதை இறுக்கியது . அப்பாவிடம் பிடிக்காத விஷயம் குடியும் ,புகையும் தான் . இப்பொழுது குடியை விட்டு ஏழு வருடங்களுக்கு மேல் இருக்கும் . குடித்து விட்டு இரவு முழுவதும் விடிய விடிய பேசி கொண்டே இருப்பார் . அப்பாவின் பகிர்தல் அனைத்தும் கடந்த கால நினைவுகளை ஒவ்வொன்றாக எரிய விட்டு இருந்தார். எனக்கு மிகுந்த மன அழுத்தங்கள் உருவான காலமது . என் கண்ணீரின் துயரம் இன்னும் பகிராத காலத்தைக் கொண்டது . வலி மிகுந்த உணர்தல் மனம் எங்கும் பரவி விட்டிருந்தது .அவ்வப்பொழுது என் ஆயாவின் அன்பே என்னை ஆற்றுப்படுத்தியது. பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த தருணத்தில் என் அண்ணன் தி. கார்த்தி அப்பாவிற்கு ஆவேசமாக ஒரு கடிதம் எழுதி இருந்தான் .என் வாழ்வில் மறக்க மறுக்கக் கூடாத கடிதம் அது . என் எதிர் காலத்தை இப்படி ஆனதற்கு அப்பா தான் காரணம் என்று மிகுந்த மன வருத்தத்துடன் சாடி இருந்தான் . தனக்குத் தெரிந்த மது வகைகளின் பெயர்களை வரிசைப்படுத்தி அனைற்றையும் நாங்கள் அறிவோம் அதனை உபயோகிக்க ஒரு நொடி போதும் என்று எழுதி இருந்தான் . முரண்கள் ஒன்றின் ஒன்றாகக் காலத்திடம் மாறக்கூடுபவை அதில் நானும் உண்டு.

------------------------------------------------------------------------------------------------------

 
அன்பினை பரவி கொண்டு திரியும் நினைவில் இருந்து ..
அப்பாவின் மளிகை கடை இருந்த காலம் எங்கள் வீட்டில் கொண்டாட்டங்கள் எங்கும் நிரம்பி இருந்தது. நாங்கள் மூவரும் ஒரே ஆடைகளை அணிந்து ஊரையே வலம் வந்து கொண்டிருந்தோம் கையில் காசு கிடைத்தால் போதும் கிளி மூக்கு பாய் கடையில் தான் கால் நிற்கும் . அப்பா மளிகை கடைக்குக் கிளம்பும் போது தம்பி பாலாஜியிடம் கடை சாவியைக் கொடுத்துத் திரும்பப் பெற்று செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் .அண்ணன்னும் நானும் பொறாமையாகத் தான் அதனைப் பார்ப்போம் . மாலை எங்கள் தெரு முழுவதும் ஆட்டமும்,பாட்டுமாக இருக்கும் அப்பா வீட்டிற்கு வரும் நேரம் பார்த்துப் படிப்பதாக எத்தனை எத்தனை முறை நடித்திருக்கிறோம் .
இரவு முழுவதும் டேப்ரிகார்டில் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் . அப்பா நூலகத்தில் இருந்து சாண்டலியன் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பார் . நாங்கள் மூவரும் ஒரே அரட்டையும் விளையட்டகவும் கழிந்தது .
எங்கள் ஆயா அப்பாவிற்கு எங்களுக்கும் அனைத்துமாய் இருந்தார்.
அப்பா டீ கடை நடத்த ஆரம்பிக்கலாம் என்ற சூழல் முதல் தன் இறுதி நாள் வரை ஆயாவின் உழைப்பு அளிப்பரியது . அம்மாவின் உழைப்பு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது .அம்மாவை அப்பா இன்று வரையிலும் அன்பாய் கிண்டல் செய்து கொண்டிருப்பார் .அம்மாவுக்கும் அது மிகவும் பிடிக்கும் . அப்பா எப்பொழுதும் தனக்குப் பிடித்த பாடலை முணு முணுத்துக் கொண்டே இருப்பார் . என்றும் தன் கொண்டாட்டங்களைச் சுமந்து திரியும் மனது அப்பாவுடையது அதன் பிம்பங்களாய் நாங்கள் .

----------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு