Posts

Showing posts from January 6, 2012

அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

Image
தன்னை எப்படி  அடையாளப்படுத்தி கொள்வது  என்ற சிக்கல்  அவ்வளவு முக்கியமில்லை  என்றாலும்  எப்படியாவது தீர்த்து கொள்வது  இன்றைய இரவின்  பெரும் வேலையாக இருக்க போகிறது . ராஜேஷ் என்ற பெயர்  வைத்த ஆயா  இன்று இல்லை  பிறர் குறிப்பிட்டு கூற  எதையாவது சொல்   கிடைத்து விட்டது  அதன் முறையாகவே  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் . உடன் பிறந்த உறவுகள் பெற்றோர்கள், நண்பர்கள் , உறவினர்கள்   என பல்வேறு  உறவுமுறை பெயர்களில்  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் . பெயர் சேர்ந்து விட்ட  ஒரு மனித உயிரினம்  தன்னை  உணர்த்தி கொண்டிருக்கும்  அன்பு ,கோபம் ,வன்மம் ,துரோகம்  , காமம்  என பல காரணிகளால்  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் . எதையும் பொருட்படுத்தாத  சுயம் சார்ந்த உணர்வை  அதன் அனுபவத்தை  கனவு கண்டு கொண்டிருப்பவன் எனவும்   அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் . திருமணம் நிச்சயம் முடிந்த  நிலையில்  இடைப்பட்ட மாதங்கள்  என் காதலியிடம் காதல்  செய்து  கொண்டிருப்பவனாக  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் . பின் இது தன் எல்லையை  விரிவித்து கொள்ளும் . எப்பொழுது நான்  நானாகிறேன் . சுயத்தின் தேடலின்   இயங்குதல்  நின