Posts

Showing posts from November 14, 2011

இரவின் எண்ண போர்வை

தொலைத்தூர இருண்மை பிடிக்க  என் நிழல் உண்டானதாக  பொய்மையை உரைத்தது  என் சுய ஒளி. நம்புவதற்கு என்றே  இருக்கிறது என் சூழ்நிலையும். அந் நிழலை  ஒழிப்பது  என்று  நேற்றைய இரவில்  முடிவு செய்தாகி விட்டது . இப்பொழுதைய ஒரே ஒரு  ஆறுதல் அத்தகைய இரவு  வர வேண்டும் என்பதே . நொடிகளை அலட்சியப்படுத்தி  சிதைத்து கொண்டிருக்கும்  மவுனமும் இரவை நோக்குகிறது . இதற்கும் தனிப்பட்ட பகை  இருக்க கூடும்  அவை  இரவினை கொடுர புன்னகையையுடன்  வரவேற்க காத்திருக்கிறது . இரவின் மீதும் அதன் நிழல் மீதும்  கொண்டுள்ள எண்ண போர்வையை  பெரிதும் ஒன்றும் செய்ய இயலாது  ஆனால் அதனை இல்லாமல்  செய்து விட ஒரே வழி இரவினை வராமல் செய்து விடுவது தான் . அப்படிப்பட்ட இரவை இப்பொழுதே  பிரபஞ்சம் உருவாக்குகிறது  அதன் இயக்கத்தில்  இப்பொழுதைய உலகில்  தோன்றிய தோன்றுகின்ற  தோன்றும் அனைத்து இரவுகளும்  காலத்தினால் செய்யப்பட்ட  என் சுய ஒளியானது .                        -வளத்தூர் தி.ராஜேஷ் .

மகா இயக்கம் .

அனுமானத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கிறது  சுயமும் அதன் சார்ந்த புற உலகமும்  பொருளினை தேடும் வாழ்வு  இன்னும் எத்தனை நூற்றாண்டு  தொடர இருக்கிறதோ  அடுத்த நூற்றாண்டுக்கும்  இப்பொழுதே பெற்று கொள்கிறது  என் வன்மம் நிறைந்த  வாழ்த்துகள். இப்பொழுதைய என் இருப்பு  பிரபஞ்சத்தில் எங்கோ  ஒரு அணுவிலும்  இருப்பதற்கான  சாத்தியங்கள்  அனைத்தும் இருக்கிறது  நீங்கள் செய்ய வேண்டியது  அதனை நம்புவது ஒன்றே . வாழ்வினை நிறைவு செய்யும்  ஒன்றை தேடும் பொருட்டு  யுகம் யுகமாய்  அலைந்த உயிரினத்தில் இருந்து  இன்னும் கிடைக்கவில்லை . அப்படி ஒன்று இருக்குமோ என்று  சந்தேகத்தின் மீதான  நம்பிக்கையை  உறுதி செய்கிறது  அத்தகைய தேடல் கொண்ட  முறையற்றவன் . மொத்தத்தில் விடுப்படும்  என் மனதை  உன் மகா இயக்கங்களில்  இயக்க செய்தாய்  என் பிரபஞ்சமே .                            -வளத்தூர் தி. ராஜேஷ் .