Posts

Showing posts from June 29, 2013

காலத்தின் இறுதியொன்று .

Image
கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஓர் நினைவை தேர்ந்தெடுத்தேன் . என்றோ கைவிடப்பட்ட நினைவு அது எவ்வித தயக்கமின்றி அனுமதித்தது அந்நினைவு அன்றிருந்த காலம் மீண்டும் உருப்பெறுகிறது . ஓர் நிமிடம் கடந்த நிலையில் வழியெங்கும் நிகழ்கால நினைவு தன்னை துரத்துகிறது . மீண்டும் அடையாளமிட்ட தன் நினைவை அங்கயே விட்டு வந்தடைந்தேன் மன்னிப்பாயாக . - வளத்தூர் தி.ராஜேஷ் .