Posts

Showing posts from December 28, 2010

நானும் தான்.

பொய்மை என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் போலி புன்னைகையில் புதைந்து போகிறது காரணமற்ற எண்ணங்கள் .... நடப்பவை தீர்மானிக்கும் உரிமை என்னிடம் இருந்தும் ஏதும் செய்யாமல் போவது வழக்கமானது ... மாற்று சிந்தனைகளை வழியற்று அழைத்து செல்கிறது என் சோம்பல் என்றேனும் விழிப்பு நிலை வந்து விட்டால் தொலைந்து போவது சோம்பல் மட்டுமல்ல நானும் தான் ....                              -  தி .ராஜேஷ் .

என் ஆணவம்

பாறைகளின் துணுக்குகளில் ஒளிந்து கொண்டுள்ள ஒரு சிறு நம்பிக்கை போன்றது என் ஆணவம் .. இவை பாறைகளை முழுவதுமாக சிதைத்துவிடுவதாக உணர கூடிய அவநம்பிக்கை போன்றது என் எண்ணங்கள் .. எதிலும் மாற்று சிந்தனையில் விளைந்த விளைவுகள் அல்ல இவை ... நிர்பந்திக்கப்பட்ட உலகத்தில் என் இயல்பில் விளைந்த விளைவுகளின் ஒற்றுமையே இவை .                             -தி .ராஜேஷ்                                

என் அகந்தையின் மிச்சங்கள்.

என் அகந்தையின் மிச்சங்கள் இன்னும் உளறிகொண்டிருக்கிறது தான் மிதிப்படுவது அறியாமல் .. என் அச்சங்களை கண்டறிந்து விட்டு ஏளனம் செய்வது வாடிக்கையாகி விட்டது என் முயற்சிகளுக்கு ... இருந்தும் தொடர்கிறேன் தோல்விகளின் பாதைகள் வழியெங்கும் வெற்றியின் ஆரவாரம் கேட்கிறது ... பெறப்போகும் உயர்வுகள் என்னை சிறுமைப்படுதாமல் நான் பெற்ற தோல்விகள் தாங்கி கொள்ளும் ...                     - தி.ராஜேஷ்