என் ஆணவம்


பாறைகளின் துணுக்குகளில்
ஒளிந்து கொண்டுள்ள
ஒரு சிறு நம்பிக்கை
போன்றது என் ஆணவம் ..

இவை பாறைகளை
முழுவதுமாக
சிதைத்துவிடுவதாக
உணர கூடிய
அவநம்பிக்கை போன்றது
என் எண்ணங்கள் ..

எதிலும் மாற்று
சிந்தனையில்
விளைந்த விளைவுகள்
அல்ல இவை ...

நிர்பந்திக்கப்பட்ட
உலகத்தில்
என் இயல்பில்
விளைந்த விளைவுகளின்
ஒற்றுமையே இவை .
                            -தி .ராஜேஷ் 
                              

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு