Posts

Showing posts from January 3, 2011

புரிதலின் பிழையா ?

தன் முனைப்பின்   ஆளுமையில் பொழிந்த என்   வசந்தமான   எண்ணங்களினால்   அலங்கரிக்கின்றன   என் பக்கங்கள் . நம்பிக்கையின்   விருப்பங்களாக   நகர்கின்றன காலங்கள். எதிர் கொள்ளும்   முரண்களில் வாய்புகளின்   தேடலாக சவால்கள்   காத்திருக்கிறது   சாதனைகள் படைக்க..   ------------------------------------------------------------- என் அச்சங்களை   கண்டறிந்து விட்டு ஏளனம் செய்வது வாடிக்கையாகி விட்டது என் முயற்சிகளுக்கு ... இருந்தும் தொடர்கிறேன் தோல்விகளின்பாதைகள் வழியெங்கும் வெற்றியின்   ஆரவாரம் கேட்கிறது ... பெறப்போகும் உயர்வுகள்   என்னை சிறுமைப்படுதாமல்   நான் பெற்ற தோல்விகள்   தாங்கி கொள்ளும் .. ------------------------------------------------------------------- வாய்ப்புகளில் சூழப்பட்ட   முடிவுகளாய் திணறி   கொண்டிருக்கிறேன் .. எது முடிவு செய்ய வேண்டுமோ   அது நிகழ்ந்து கொண்டிருகிறது   என் சம்மதம் இல்லாமல் ... எதுவும் இன்பமாக மாற்ற   தெரிந்த அன்பிற்கு   அன்பாக இருப்பதில் தான் பிரச்சனையோ இல்லை இதுவும் நான் செய்த புரிதலின் பிழையா . -------------------------

புறக்கணிப்பின் நிலைகளில்

அரவணைப்பில் காத்திருக்கும்  நேசங்களில் நொடிகளாய் நீள்கிறது உன் பரிதவிப்புகள் . காலம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கத்தில் உறைந்து போகிறது நம் புரிதல் மவுனங்களில். நீடித்து இருக்கும் நம் தன்மைகளை வெறும் வார்தைக்குள் அடங்கிவிடுவதில்லை  --------------------------------------------------------------- புறக்கணிப்பின் நிலைகளில் கடந்து போகும் வலிகளை சேகரிக்கிறேன் அனுதினமும் .. ஆறுதலின் மொழியாக தனிமையின் துணை தோல்கொடுக்கிறது அனைத்தையும் தாங்கி கொள்ள .. ஏற்றுக்கொள்ளப்படுபவை முன்னின்று பயணம் செய்ய வழிவகை செய்கிறது என் ஏளனங்கள். -------------------------------------------------------------------- மகிழ்வின் ஒவ்வொரு   தருணத்திலும்   புதிப்பிக்கப்படுகிறது குழந்தை பருவங்கள் .. எப்பொழுதும்   இழந்த காலங்களில்   மட்டுமே உணரபடுகின்றன   தொலைந்து போன   நேசங்களை .. கணங்களின் கூடுதலில்   உயர்ப்புடன் நாடுகிறது   மகிழ்வின் இருப்பிடம் நோக்கி . ------------------------------------------------------------- நிலைக்கின்ற சலனங்களில்   சரிந்து வீழ்கிறது   என் மனதின்

என் கருதுகோள்கள் .

என் கருதுகோள்கள்   ஒவ்வொன்றாக   உதிர தொடங்குகிறது   பொய்மையின் உருவில் .. வழியெங்கும் அதன்   பிம்பங்கள் என்னை   துரத்துகிறது   உண்மையின்   சிந்தனையாய் .. குறிப்பிட்டு சொல்ல   ஏதும் இல்லாமலே   வார்த்தை இயலாமையில்   உறைகிறது .. அவரவர் நியாயங்கள்   பொய்மையும்   உண்மையும்   உருவில்   அலைந்து   கொண்டிருக்கிறது .. அவர்களுக்கு   விருப்பமானவற்றை   அணிகிறார்கள்   நம்மையும்   அணிவித்து   விடுகிறார்கள்   அவர்களின்   வாயிலாகவே.                 - தி .ராஜேஷ் .