புறக்கணிப்பின் நிலைகளில்

அரவணைப்பில் காத்திருக்கும் 
நேசங்களில் நொடிகளாய்
நீள்கிறது உன் பரிதவிப்புகள் .

காலம் முன்னெப்போதும்
இல்லாத நெருக்கத்தில்
உறைந்து போகிறது
நம் புரிதல் மவுனங்களில்.

நீடித்து இருக்கும் நம்
தன்மைகளை வெறும்
வார்தைக்குள்
அடங்கிவிடுவதில்லை 



---------------------------------------------------------------


புறக்கணிப்பின்
நிலைகளில்
கடந்து போகும்
வலிகளை
சேகரிக்கிறேன்
அனுதினமும் ..

ஆறுதலின் மொழியாக
தனிமையின் துணை
தோல்கொடுக்கிறது
அனைத்தையும்
தாங்கி கொள்ள ..

ஏற்றுக்கொள்ளப்படுபவை
முன்னின்று பயணம்
செய்ய வழிவகை
செய்கிறது என் ஏளனங்கள்.

--------------------------------------------------------------------
மகிழ்வின் ஒவ்வொரு 
தருணத்திலும் 
புதிப்பிக்கப்படுகிறது
குழந்தை பருவங்கள் ..

எப்பொழுதும் 
இழந்த காலங்களில் 
மட்டுமே உணரபடுகின்றன 
தொலைந்து போன 
நேசங்களை ..

கணங்களின் கூடுதலில் 
உயர்ப்புடன் நாடுகிறது 
மகிழ்வின் இருப்பிடம்
நோக்கி .

-------------------------------------------------------------
நிலைக்கின்ற சலனங்களில் 
சரிந்து வீழ்கிறது 
என் மனதின் நோக்கங்கள் ..
கீழே வீழ்ந்து 
கொண்டிருக்கும் 
என் எண்ணங்களை 
மறுமதிப்பீடு செய்கிறது 
என் செயல்கள் ..

மனதின் 
சுயப்பரிசோதனைகள் 
வலுப்பெறுகிறது .



----------------------------------------------
                                       -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு