Posts

Showing posts from October 4, 2014

உமிழ்.

Image
காலம் தொடர்க் குமிழாய் என்னை உமிழ்கிறது. இன்னுமும் ஆங்காங்கே என் சிதறல் அண்டமெங்கும் மண்டிக் கிடக்கிறது . உமிழ்ந்த இக்கணத்தின் குமிழ் பெருவெளியில் ஓர் இறகு விழுவது போல மனம் சிதறிக் குவிகிறது . இதோ என்னின் சிதறல் தெரிக்க காலம் மற்றுமொரு என்னின் குமிழை உமிழ்கிறது                           வளத்தூர் தி.ராஜேஷ்.