Posts

Showing posts from March 30, 2014

சுயம் .

யாருமற்ற தனிமையில் தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில் மனத்திரையின் வழியே தன் சுயம் விழித்து கொண்டது . இனி அகால நினைவின் விளிம்பில் எதனை ஈட்டி கொண்டிருக்கும் சுயம் . -வளத்தூர் தி.ராஜேஷ்.

தன் காலம் .

நீர்மம் போலத் தன் ஒளியும் அரூபமானது மனதின் வடிவங்களை உடுத்தி கொள்கிறது . உருவாக்கத்தின் இயல்பு ஏதுமின்றி நீ உருவாகினாய். வெளி தன்னையைப் பிரதிபலிக்கும் முடிவிலி பிம்பம். அதில் ஆதியின் தேடலை வெகு காலமாகவே உணர்த்திக் கொண்டிருக்கிறது தன் காலம் . - வளத்தூர் தி. ராஜேஷ்

தன் தேடல்

ஒன்றின் தொடர்ச்சியை முன்னெடுக்கிறது தன் தேடல் ஒவ்வொன்றிலும் அச்சம் சூழ்கிறது ஆதியின் ஈடில்லா தொடர்ச்சியின் இக்கணம் கடந்து கொண்டிருக்கையில் வெளி தன் இயல்பின் நகர்தலை மேலும் தீவிரமாக்குகிறது .                                        - வளத்தூர் தி. ராஜேஷ்

சிறகு

Image
சிறகின் சுமை பழமை ஆகி விட்டது பறத்தல் வெளியின் இருப்பை மட்டுமே உணர்த்திச் செல்கிறது . காலம் இட்டுச் செல்லும் வரையில் நினைவு அங்கும் இங்குமாக சிறகடிக்கிறது .                       -வளத்தூர் தி. ராஜேஷ்