Posts

Showing posts from June 10, 2011

விழித்திருப்பவனின் இரவும் பகலும் .

Image
விழித்திருப்பவனின் இரவில்  கனவொன்று வந்து  கொண்டே இருக்கிறது  மீண்டும் மீண்டும்  வந்து போகிறது  அதே கனவொன்று  ஒரே கனவொன்று . மெல்ல மெல்ல அவனை  உள்ளிழுக்கிறது  கனவொன்று . பல ஆசைகளை  நிறைவேற்றி கொள்ளலாம்  என நிபந்தனை விதிக்கிறது  கனவொன்று . பல ஆயிரம் வன்மங்களை  சுய சார்பற்று விதைக்கவும்  நிபந்தனை விதிக்கிறது  கனவொன்று . நீ நினைப்பதை அனைத்துமே  உருவாக்கி கொள்ளலாம் எனவும்  நிபந்தனை விதிக்கிறது  கனவொன்று . இறுதியில்  இவைகள்  அனைத்துமே  கனவென்றே கொள்ளவும் என  விழித்திருப்பவனின் இரவில்  கனவொன்று வந்து  கொண்டே இருக்கிறது  மீண்டும் மீண்டும்  வந்து போகிறது  அதே கனவொன்று  ஒரே கனவொன்று . விழித்திருப்பவனின் பகலில்  கனவொன்று வந்து  கொண்டே இருக்கிறது  மீண்டும் மீண்டும்  வந்து போகிறது  அதே கனவொன்று  ஒரே கனவொன்று . மெல்ல மெல்ல அவனை  உள்ளிழுக்கிறது  கனவொன்று . பல ஆசைகளை  நிறைவேற்றி கொள்ளலாம்  என நிபந்தனை விதிக்கிறது  கனவொன்று . பல ஆயிரம் வன்மங்களை  சுய சார்பற்று விதைக்கவும்  நிபந்தனை விதிக்கிறது  கனவொன்று . நீ நினைப்பதை அனைத்துமே  உருவாக்கி கொள்ளலாம் எனவும்  நிபந்தனை விதிக்கிறது  கனவொன்று . இ