Posts

Showing posts from February 20, 2011

கேள்விகளின் விடை

Image
பழமை கொண்டு நீக்கிய கேள்விகள்  விடை தேடுவதற்கான  வேட்கையினை  ஏதோ சில கேள்விகளால் மட்டுமே  பெறப்பெற்றுகின்றன . அதை கண்டதைவதில்  அச்சங்கள்  சூழப்பட்டிருக்கிறது  மாய வலைகளும்  பின்னப்படிருக்கிறது  சிக்கி கொள்ள எதுவாக  பொய்க்கும் நம்பிக்கையை  இரையாக தூவி உள்ளனர் . ஒரு நம்பிக்கை பொய்க்கும்  பொழுது நீங்கள் இது வரை  நம்பிய உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது . அவை எவையாக இருந்தாலும்  கேள்வியின் பதில்களோ  பதிலின் கேள்விகளோ  பல கற்பிதங்கள் மாய்த்து கொள்வதற்கு  துடித்து கொண்டிருக்கும் அக்கேள்வியின்  நிலையை அந்த விடை அறிந்திருக்குமா  என  சந்தேகம் வலுப்படுகிறது . வரலாற்றின் உண்மை அனைத்தும்  புதைந்து போனவையாக இருப்பினும்  அவையாவற்றிற்கும் நிழல் பிம்பமாக  இன்றுவரை உலவுகின்ற சான்று  நாம் மட்டுமே . ஆதி கேள்விகள்  இன்றைய பதிலை  எப்படி ஏற்றுகொள்ளும்  இரண்டுமே .                     தி .ராஜேஷ் .

இனி

Image
மிகவும் எளிதானவையாக   உருவகப்படுத்த முடிகிறது   நாம் தவறவிட்ட உண்மைகள் குற்ற   உணர்வை   அலட்சியம்   செய்வதை   வாடிக்கையாக    மாற்றுகின்ற வழித்தோன்றலை   நியாயப்படுத்த பல தொன்மம்   அடங்கிய தொகுப்புகள்   உறங்கி உறைந்து போகிறது   அதன் வழியே   இனி   உறைந்த நினைவுகளில்   கரைகிறது நிகழ்வுகள் . சரியென கொள்வதின்   பிணைப்பை   தடை செய்வதாக   நினைத்து   விடுதலை   செய்து விடுகிறாய்   அவையாவும்   வன்மம் கொண்டு   அங்குமிங்கும் அலைந்து   தோன்றலின் இருப்பிடத்தை   நோக்கி பயணிக்கிறது . தடுக்கின்ற நிலை   எல்லை மீறி போவதால்   நமக்காகவே பின்பற்றப்பட்ட   வழிமுறையின் வினையில்   நெருங்குதல் எவையென   உறுதிப்படுத்தி கொண்டால் பழியை சுமத்த எளிதாகவே   இருக்கும் இன்னுமொரு   தொன்மம் நிறைந்த   வழிக்காட்டலுக்கு இருள் சேர்த்தாயிற்று   இனி பயணப்படுவது   மட்டுமே செய்யவேண்டியது . இறுதியாக   முதலில் தோன்றிய   அணுக்களின் மிச்சம்   இன்னுமும் என்னில்   இருப்பதால் அதன்   நுண்ணிய அசைவின்   பெரும்பகுதி இனி நாமவோம்  .                                      - தி . ராஜேஷ் .