கேள்விகளின் விடை



பழமை கொண்டு நீக்கிய கேள்விகள் 
விடை தேடுவதற்கான  வேட்கையினை 
ஏதோ சில கேள்விகளால் மட்டுமே 
பெறப்பெற்றுகின்றன .

அதை கண்டதைவதில் 
அச்சங்கள் 
சூழப்பட்டிருக்கிறது 
மாய வலைகளும் 
பின்னப்படிருக்கிறது 
சிக்கி கொள்ள எதுவாக 
பொய்க்கும் நம்பிக்கையை 
இரையாக தூவி உள்ளனர் .

ஒரு நம்பிக்கை பொய்க்கும் 
பொழுது நீங்கள் இது வரை 
நம்பிய உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது .

அவை எவையாக இருந்தாலும் 
கேள்வியின் பதில்களோ 
பதிலின் கேள்விகளோ 
பல கற்பிதங்கள் மாய்த்து கொள்வதற்கு 
துடித்து கொண்டிருக்கும் அக்கேள்வியின் 
நிலையை அந்த விடை அறிந்திருக்குமா 
என  சந்தேகம் வலுப்படுகிறது .

வரலாற்றின் உண்மை அனைத்தும் 
புதைந்து போனவையாக இருப்பினும் 
அவையாவற்றிற்கும் நிழல் பிம்பமாக 
இன்றுவரை உலவுகின்ற சான்று 
நாம் மட்டுமே .

ஆதி கேள்விகள் 
இன்றைய பதிலை 
எப்படி ஏற்றுகொள்ளும் 
இரண்டுமே .
                    தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு