Tuesday 31 January 2012

காலம்-உயிரோசை


இந்த வாரம்  உயிரோசையில் வெளியான கவிதை  

மதிப்பிழந்த என் 
சுயத்தை 
வெறுமென 
வேடிக்கை காட்டும் 
பொருளாக 
மாற்றியமைக்க 
இயன்ற வரை 
முயல்கிறது 
என்னை அறியப்படாத 
காலம் ஒன்று .

தன்னை நிருபணம்
செய்வதற்கு 
சுயத்தை 
ஒன்றுமில்லாமல் 
செய்வதை 
வேடிக்கை பார்க்கிறது 
என்னை 
அறிந்து வைத்துள்ள 
காலம் ஒன்று .

சுய அங்கீகாரம் 
அச்சில் 
பெறுவதில் இல்லை 
என்பதை 
உணர செய்கின்ற 
காலம் இன்னும் 
தோன்றியிருக்கவில்லை .

காலங்கள் 
இணைத்துள்ள 
என்னை 
பெருவெளி 
மட்டுமே 
அறியக்கூடிய 
சுயத்தை 
பெற்றிருக்கிறேன் .
                         வளத்தூர் தி.ராஜேஷ் .
 அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு 

Friday 20 January 2012

விடைபெறுதல்-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில்  வெளியான என்  கவிதை 


http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5200


நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை .


இப்பொழுது ஏன்
விடை பெறுதல் 
அவசியமாகிறது என்றால்
என்னிடமான சுயத்தின்
மவுனம் தாங்கி
கொள்ள முடியாமல்
இருப்பதால் .


அதன் கனமேற்றத்தின்
அழுத்தங்கள்
என்னை எப்பொழுதும்
சோதித்து கொண்டிருப்பதால் .


என்னை தன்  நீர்மம்
நிறைந்த பொருளாக
மாற்ற முயல்வதால் .


என்னை தன் மகிழ்வின்
மீது அமர வைப்பதினால்


விடை பெறுதல்
மனதின்
அனைத்துமான
ஒன்றாக இருக்க
வேண்டும் .


அதன் நிலையிலே
முதன் முதலாக
தன் சுயத்தினை
பார்க்க


விடை பெறுதல்
பெறுவதற்கு
நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை.


அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .

Wednesday 11 January 2012

தேடல் வழியில்-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில்  வெளியான என் ஒன்பதாவது கவிதை 


http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5179


அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .

Friday 6 January 2012

அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .













தன்னை எப்படி 
அடையாளப்படுத்தி கொள்வது 
என்ற சிக்கல் 
அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் 
எப்படியாவது தீர்த்து கொள்வது 
இன்றைய இரவின் பெரும் வேலையாக
இருக்க போகிறது .

ராஜேஷ் என்ற பெயர் 
வைத்த ஆயா இன்று இல்லை 
பிறர் குறிப்பிட்டு கூற 
எதையாவது சொல்  
கிடைத்து விட்டது 
அதன் முறையாகவே 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

உடன் பிறந்த உறவுகள்
பெற்றோர்கள்,நண்பர்கள் ,உறவினர்கள்  
என பல்வேறு 
உறவுமுறை பெயர்களில் 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

பெயர் சேர்ந்து விட்ட 
ஒரு மனித உயிரினம் 
தன்னை உணர்த்தி கொண்டிருக்கும் 
அன்பு ,கோபம் ,வன்மம் ,துரோகம்  ,காமம் 
என பல காரணிகளால் 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

எதையும் பொருட்படுத்தாத 
சுயம் சார்ந்த உணர்வை 
அதன் அனுபவத்தை 
கனவு கண்டு கொண்டிருப்பவன் எனவும்  
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

திருமணம் நிச்சயம் முடிந்த நிலையில் 
இடைப்பட்ட மாதங்கள் 
என் காதலியிடம் காதல் 
செய்து  கொண்டிருப்பவனாக 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .
பின் இது தன் எல்லையை 
விரிவித்து கொள்ளும் .

எப்பொழுது நான் 
நானாகிறேன் .
சுயத்தின் தேடலின்  இயங்குதல் 
நினைக்கின்ற நொடிகளில் 
மட்டும் சுயம் 
உடையவனாக 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

தன் இருப்பை எப்படி 
அடையாளப்படுத்துவது
என்ற குழப்பத்தில் 
யாதுமற்ற செய்கை 
சிந்தித்து கொண்டிருப்பவனாக 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

எல்லாவற்றையும் விட 
நான் இறந்த பிறகு 
பிரபஞ்ச கனவினை 
சுமந்து கொண்டிருந்தவன் 
ஒருவன் இப்படி தான் 
வாழ்வான் என 
இப்பொழுதே 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .
                                                  வளத்தூர் தி.ராஜேஷ் .














 

Wednesday 4 January 2012

பிறகு








தேடல் வழியில் 
என் கனவினை 
காண்பதற்கு 
பிரபஞ்சம் தோன்றா 
நிலையில் 
அதன் வெற்றிடத்தில் 
இல்லாமையின் இருப்பை 
உணர்த்தி கொண்டிருக்கும் 
சுய திறவுக்கோல் 
இன்னுமும் 
உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது .


நிறுத்தம்.
ஒரு இடைவெளியாக 
என்னால் குறிக்கப்பட்டு 
முடிவிலியாக 
இன்று மாறும் வினையினை 
பின் 
எதிர்காலத்தின் ஒரு நிகழ்காலம் 
தன் இயங்குதலை மேலும் 
தொன்மையாகும் .


பிறகு 
சொல்லப்பட்டவை 
இன்னுமும் 
முடிக்கப்படவில்லை .
நிகழ்வின் அதிர்வுகள் 
உணர்த்துவதற்கு என்று 
ஒரு பிரபஞ்ச இயக்கத்தை 
நினைப்பதற்கு இந்த நொடியின் 
பிறகு 
அவை 
என்னுடையதாக மாறும் 
காலத்தில் 
நான் இருக்கபோவதில்லை .


                           -வளத்தூர் தி.ராஜேஷ் .



Tuesday 3 January 2012

பிரபஞ்ச பகிர்வுகள்

எதையும் இன்னும் 
சொல்லி முடிக்கப்படவில்லை 
நிகழ்வின் மீதங்கள் 
மட்டுமே இப்பொழுது 
நிகழ்த்தப்படுகிறது .
உங்களால் வேறொரு விதமாக 
மீண்டும் மீண்டும் நிகழ்வு
மாற்றியமைக்கப்படுகிறது
இக்கணம் .
புரிந்து கொள்வதற்கு
ஏதுமில்லை
உணர்வதற்கும் எல்லை இல்லை .
இப்படியும் என் அமைதியை
தேடி கொள்வதில்
உணர்த்தப்பட்ட
பிரபஞ்ச மவுனத்தை
அகமாக மாற்றி கொண்டு
என் வார்த்தைகளை
இவ்வளவு அடுக்கி வைப்பதில்
எனக்கான இப்பொழுதைய இருப்பை
வழங்கி உள்ளது காலம் .

----------------------------------------------------------------------
அன்றே 
குறிப்பெடுக்க 
நம்மை 
வடிவமைக்கும் 
சொல் 
கிடைக்கவில்லை 
இன்று 
கிடைத்துவிட்டதாக 
நம்பும் காராணிகள் 
இரவையும் பகலையும் 
விட்டுவைக்காமல் 
பெருவெளியில் 
தேடி கொண்டிருக்கிறது .
உன் அகமகிழ்வின் பிரபஞ்சத்தில் 
அவை நிறைவு பெற்றதாக 
மிகுந்து இருக்கிறது .
இதனை கடைசி வரை 
சொல்ல போவதில்லை 
என்று 
உறுதியெடுக்கும் முன்பாகவே 
அதனை உடைத்தெறிந்தாய் அன்பே .

-------------------------------------------------------------------------
மிச்சங்களின் வழியே 
ஒருபோதும் 
அனுமதிப்பது இல்லை 
இந்த மாலை. 
சற்றே நீண்டு விட்ட 
என் நொடிகளை 
ஒளித்து வைக்க 
புதிய காலமொன்றை 
உன் வழியாகவே 
உருவாக்குகிறேன் .
இவைகளை கடந்து 
நிறைவை அடைவது
எப்பொழுதும் 
பிரபஞ்சத்தில் மட்டுமே 
சாத்தியமாக்குகிறது.

------------------------------------------------------------------------------------
பிறகு 
சொல்லப்பட்டவை 
இன்னுமும் 
முடிக்கப்படவில்லை .
நிகழ்வின் அதிர்வுகள் 
உணர்த்துவதற்கு என்று 
ஒரு பிரபஞ்ச இயக்கத்தை 
நினைப்பதற்கு இந்த நொடியின் 
பிறகு 
அவை 
என்னுடையதாக மாறும் 
காலத்தில் 
நான் இருக்கபோவதில்லை .

-------------------------------------------------------------------------------------
வளத்தூர் தி.ராஜேஷ் .

Monday 19 December 2011

பொருள்-திண்ணை.

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 


http://puthu.thinnai.com/?p=7166


பொருள்  கொண்டு 
மனிதம் மதிப்பீடு 
செய்யப்படும் 
வழிமுறையை 
பழக்கப்படுத்தி கொள்வதில் 
இனி சிக்கல் 
இருக்கபோவதில்லை.

மற்றவர்களை 
உதாரணம் கொண்டு 
உருவாக்கப்படவில்லை 
இந்நிலை. 
ஒரு நீடித்த பகலில் 
கைவிடப்பட்ட நம்பிக்கையை 
சுமந்து கொண்டு 
சுய நீர்மம் நிறைவில் 
மனதின் அழுத்தங்களை 
தாங்கி கொள்ள இயலாத நிலையில் 
என்னையும் ஆட்கொண்டது 
நாளை உங்களையும் தான் .

இனி 
உயிரினம் வாழ 
நிர்பந்தங்களை 
பட்டியல் கொண்டு 
மன குற்றங்களை 
மறைத்து மறந்து வாழவே 
உசித்தம் .
அது மிக எளிதான இயல்பு தான் .
                                  -வளத்தூர் தி.ராஜேஷ் 

அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு .