Posts

Showing posts from November 6, 2012

சுயத்தின் கொலைகள்.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6056 அன்றொரு நாள் பலியிட்ட தன் நிழலைத் தேடிக் கொண்டிருக்கிறேன் வன்மம் நிறைந்த காலத்தில் சோர்ந்து விட்டிருக்கிறது நொடிகள் . அச்சமிட்டு அலைந்து கொண்டிருந்த கனவில் இரையாக்கப்படும் இரவுகள் பரிதாபமானது. குவியத்தின் இறுக்கம் மெல்லிய இரவைக் கடந்து கொண்டிருக்கிறது . இருப்பின் ஒளி என் நிலை கொண்டு பிரதிபலிக்கிறது . உன் தொன்மை ஒன்றின் படிமம் நான். சுயத்தின் கொலைகள் மீண்டும் மீண்டும் கேட்பார் அற்று கிடக்கிறது . என் அத்தனை காதலும் திசைகளற்றுப் பரவ உன் அமைவு பிரதி பிரபஞ்சத்தை உருவாக்கி க் கொண்டிருக்கிறது . தன் தவிப்புகளை அனைத்தும் குமிழ் செய்து மன படிமத்தில் பாதுகாத்து வைக்கிறேன் . இரவின் ஒளிர் சூழ மீதங்கள் கடக்கிறது . என் அன்பினை வடிவமைக்கும் இயக்கம் நீ மட்டுமே . நீக்கமற நீ இருந்த காலத்தில் நானும் இருந்து கொண்டிருக்கிறேன். முன் தோன்றா கனவுகளில் நிழல் உட்கொண்ட ஒளியாகி போனது இரவுகள் . கணமேற்றும் நிகழில் மீள் நீ மட்டுமே .                          -வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண