Posts

Showing posts from August 1, 2011

போதுமானது .

மரணித்து கொண்டிருக்கும்  ஒரு மவுனத்தை  காலத்தாலும்  அனுமானம் செய்ய இயலாது . இப்படியாக தான்  தொடங்கியது உனக்கான  என் முதல் வார்த்தை . ஆனால் நீ நம்புவதாக பாசாங்கு  செய்கிறாய் . உன் விழிகளின்  நிழல் கொண்டே  எல்லா இரவினையும்  கடக்கிறேன் . கனவெங்கும் நமக்கான  மழை காத்திருக்கிறது  அதன்  நீர்ம சிதறல்கள்  நம் மனதை  ஒத்திருக்கிறது . இதை நீ மறுக்கவே  இல்லையென்றாலும் உன் அக அசைவில்  அறிந்து கொண்டேன்  எனக்கான  உன் ரகசியங்களை.  பகலும் இவ்வாறாகவே  தொடர்கிறது . இறுதியில்  அனைத்துமே  கனவென்றே  நம்பவைக்கப்படுகிறது  நமக்கான எதிர்காலம் . இதை நாம் கரம் பிடித்த பின்  பரிசோதிக்கலாம் என்றாய்  அழியாத புன்னகையை கொண்டு  எனக்கு அது மட்டுமே  போதுமானது .                        -வளத்தூர் தி.ராஜேஷ் .

கூறியிருக்கவில்லை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை  http://puthu.thinnai.com/?p=2790 இன்று இருப்பதை கவனமாக பரிசோதித்து கொள்கிறேன் ஒவ்வொன்று செயலும் காலத்தின் பிரதிபலிப்பை காட்டி கொடுத்து விட கூடும் . முன்பு இருந்தவையை விட அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது என் மனதின் மவுனத்திற்கு. தீவிரப்படுத்தும் கருத்தை நொடியின் மீதே கடந்து விடுகிறது என் ஒவ்வொரு செயலும் . விளைகின்ற யாவும் மற்றவர்களை போல என்னை  சேராமல் இருக்க கடவுது. இவை அனைத்தும் என்றேனும் ஒன்றை உங்களிடம் கூறியிருப்பதை ஏற்றுகொண்டிருக்கக் கூடும் மறுத்திருக்கவும் செயலாம். அதை விட மிகவும் எளிதானது நான் எதுவும் கூறியிருக்கவில்லை என்பது தான் . -வளத்தூர் தி .ராஜேஷ் அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .