போதுமானது .

மரணித்து கொண்டிருக்கும் 
ஒரு மவுனத்தை 
காலத்தாலும் 
அனுமானம் செய்ய இயலாது .
இப்படியாக தான் 
தொடங்கியது உனக்கான 
என் முதல் வார்த்தை .
ஆனால்
நீ நம்புவதாக பாசாங்கு 
செய்கிறாய் .

உன் விழிகளின் 
நிழல் கொண்டே 
எல்லா இரவினையும் 
கடக்கிறேன் .
கனவெங்கும் நமக்கான 
மழை காத்திருக்கிறது 
அதன் நீர்ம சிதறல்கள் 
நம் மனதை 
ஒத்திருக்கிறது .
இதை நீ மறுக்கவே 
இல்லையென்றாலும்
உன் அக அசைவில் 
அறிந்து கொண்டேன் 
எனக்கான 
உன் ரகசியங்களை. 

பகலும் இவ்வாறாகவே 
தொடர்கிறது .
இறுதியில்  அனைத்துமே 
கனவென்றே 
நம்பவைக்கப்படுகிறது 
நமக்கான எதிர்காலம் .
இதை நாம் கரம் பிடித்த பின் 
பரிசோதிக்கலாம் என்றாய் 
அழியாத புன்னகையை கொண்டு 
எனக்கு அது மட்டுமே 
போதுமானது .

                       -வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு