Posts

Showing posts from December 6, 2010

பாரதியார் கவிதைகள்

Image
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்  ஏழைமை யுண்டோடா ?-மனமே  பொல்லாப் புலுவுனைக் கொல்ல நினைந்த பின்  புத்தி மயக்கமுண்டோ ? உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்   உள்ளங் குலைவ துண்டோ -மனமே  வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண்டோடா ?  சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்  செய்கையுந் தேர்ந்துவிட்டால் -மனமே  எத்தனை கோடி இடர்வந்து சூழினும் எண்ணஞ சிறிதுமுண்டோ ? செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்  தேவ னுரைத் தனனே -மனமே  பொய் கருதாம லதன்வழி நிற்பவர்  பூதல மஞ்சுவரோ? ஆன்ம வெளிக்கடல் மூழ்கி திளைப்பவர்க்  கச்ச முண்டோடா ?-மனமே  தேன்மடை யிங்கு திறந்தது கண்டு  தேக்கித் திரிவமடா.                               -பாரதியார் . ----------------------------------------------------------------

மவுனம்

மவுனத்தின் வடிவம்  எப்படியெல்லாம்  இருக்குமென  யூகிக்கிறேன்.. மவுனத்தை  பெருபவனிடமும் வழங்குபவனிடமும் வேறுப்பாடு காண  இயலவில்லை .. இருந்தும் தேடலின்  ஒரு மவுனத்திற்கும்  அடுத்த மவுனத்திற்கும்  இடையே உள்ள  தூரங்கள்  ஒளி ஆண்டுகளாக  நீண்டுள்ளன .. மவுனத்தை அடையும்  பொழுது தோன்றிய  வடிவத்தை காண இயலாது  ஏனெனில் எல்லாவற்றிலும்  என் முகம் கொண்டே திரிகிறது ..                                -தி .ராஜேஷ்

அச்சங்களின் நிழல் நானாக

எதிர்ப்படுபவைகள்  அனைத்திலும்  அச்சம் என்னை  சூழ்கிறது .. அவைகள்  நிலையில்லாமல்  துரத்துகிறது  நானும்  ஓய்வில்லாமல்  ஓடுகிறேன்.. அச்சத்தின்  நிழல்கள் கூட  அமைதியின்மையை  உண்டாக்குகிறது .. பின்பற்றப்படும்  அச்சங்கள்  நிர்பந்திக்கபட்டவையாக தோற்றம் கொள்கிறது .. அவைகளை எதிர் கொள்ள  நானும் அச்சமாகிறேன்..                                  தி .ராஜேஷ் 

காலத்தின் பிழை

நிகரற்ற நாட்களில்  மனம் எப்பொழுதும்  நிலைபடுத்தி கொள்கிறது  அவை எத்தகையதாக  இருந்தாலும் .. நகர்தலில் காலத்தை  நிறுத்தி ஆரம்பிக்க  உன்னால் மட்டுமே  முடிகின்ற  நினைவாகிறாய் .. நிகழ்கால சூழலின்  வெறுப்புகள்  என் தொகுப்புகளாக  சேர்த்துக்கொள்ளப்படுகிறது .. செயல்களின் மவுனங்கள்  கனமாகிறது மேலும் மேலும்  அழுத்தங்கள் கூடுகிறது  வெற்றிடங்கள் முழுவதும்  நிறைவாய் நிரப்புகிறாய் .. பொருத்து கொள்வதென  முடிவு செய்தபின்  காலங்களில் கரைகிறேன்  நொடி நொடிகளாக...                           -தி .ராஜேஷ் 

அன்பின் தந்தை

தந்தையிடம் உள்ள ஆற்றலுக்கு முன் நான் ஒன்றும் இல்லாதவன் தான் . வளரும் பருவத்தில் நான் கொண்ட காணமல் போன நேசங்கள் ஒவ்வொன்றாக துளிர்கிறது ... எத்தனையோ விலகல் உருவாக்கினேன் என் தந்தையிடம் .. இன்று அன்பை விரும்பியபின் உருவான விலகல் மிகவும் கொடுமையாகவே உள்ளது ...                                       -தி .ராஜேஷ் 

பொய்மையும் நானும்

பொய்மை நிலையில் சிறதும் வெட்கம் இல்லாமல் உலவுகின்ற என்னை புகழ்கிறான் என் நிலை கொண்ட ஒருவன் ... அந்த ஒருவனை பற்றியே தொடர் சங்கிலி போல் பரவி கிடக்கிறது என் மன சங்கிலி ...... தகர்த்து எரிய வேண்டிய நான் பொய்மையின் புகளுரையில் வெற்று படகு போல் தனித்து விட படுகிறேன் மற்றொருவனை போல் தொடரும் நிலையில் பொய்மையும் நானும் ..                                                -தி .ராஜேஷ்

ஏளனத்தின் இன்றியமையாமை

இன்று வரை நீ இன்றியமையாததற்கு அன்றே நீ செய்த விதை வேருன்றி இருக்கிறது இதில் தயக்கம் ஏதும் இல்லை சொல்வதற்கு ... விளக்கம் தேடுவதற்கு கொடுபதற்கும் விளங்கவில்லை எம் மொழியில் ... புரியாத யாரும் அறியாத அம்மொழியில் நான் மொழி பெயர்ப்பு செய்கிறேன் பிறந்த குழந்தை சிரிப்பில்   இன்னுமா விளங்கவில்லை ... தூக்கி வீச பட்ட என் கனவுகளின் மிச்சம் இதிலும் ஒளிர்கிறது.. எதனினும் கொண்டு உன்னை அறியேன்  இதோ என் எண்ணங்களை பற்றி கொள் என்று தானே சொன்னேன் அதற்க்காக அளவில்லாமல் கொல்லும் உன் ஏளன பார்வை என்னை வதம் செய்கிறது ...                                  -தி .ராஜேஷ் 

அன்பு நிலை .

என் எண்ணங்களின் தவிப்புகளை வரையறை செய்ய இயலாமையில் என் நிமிடங்கள் தனிமைக்கு அழைத்து செல்கிறது ... தோன்றும் மருத்தொன்றலின் சிந்தனையை வழிப்பறி செய்கிறது உன் நினைவுகள் .... மறுக்கும் உண்மையின் மொழிபெயர்ப்புகளை பொய்மையை நாடுகிறது ... நடக்கும் நிகழ்வுகளை இயல்பாய் ஏற்று கொண்ட என் மனம் ... என்றுமே தொடரபோவது உன் அன்பு நிலையையே.               - தி.ராஜேஷ் .