காலத்தின் பிழை

நிகரற்ற நாட்களில் 
மனம் எப்பொழுதும் 
நிலைபடுத்தி கொள்கிறது 
அவை எத்தகையதாக 
இருந்தாலும் ..

நகர்தலில் காலத்தை 
நிறுத்தி ஆரம்பிக்க 
உன்னால் மட்டுமே 
முடிகின்ற 
நினைவாகிறாய் ..

நிகழ்கால சூழலின் 
வெறுப்புகள் 
என் தொகுப்புகளாக 
சேர்த்துக்கொள்ளப்படுகிறது ..

செயல்களின் மவுனங்கள் 
கனமாகிறது மேலும் மேலும் 
அழுத்தங்கள் கூடுகிறது 
வெற்றிடங்கள் முழுவதும் 
நிறைவாய் நிரப்புகிறாய் ..


பொருத்து கொள்வதென 
முடிவு செய்தபின் 
காலங்களில் கரைகிறேன் 
நொடி நொடிகளாக...

                          -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு