Posts

Showing posts from September 5, 2011

மன்னிப்பதற்கான கனவு -திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=3949 இப்படியாக தான்  வாழ்வியல் கனவு  அமைக்கப்படும் என்று போதிக்கப்பட்டது . இதில் இன்னும் நீ  வந்திருக்கவில்லை . கலைந்து போன  கனவை  என்றேனும்  சந்திக்க இருப்பாய் வன்மம் கொண்ட  காலம் எச்சரித்து  கொண்டிருக்கிறது  அப்பொழுதும் நீ  கண்டிப்பாக  வந்திருக்கவில்லை . காத்திருக்கும்  அடுத்த நொடி  அனைத்துமாக  நீயாக இருப்பதற்கு  இன்னும் ஒரு வாரம் கடக்க வேண்டிருக்கிறது .. ஆதலால் நீ இன்னும்  வந்திருக்கவில்லை . நம்மை காலம்  இணைத்திருக்குமாயின்  இதையே என் அன்பாக  எற்றுகொள்  இல்லையெனில்  இருக்கவே இருக்கிறது  என் வழக்கமான காலம்  தன் பழியை சுமக்க . தீர்மானத்தின்  தயக்கம்  இருப்பதினால்  நீ இன்னும் இங்கு  வந்திருக்கவில்லை . தேடும் விழி கொண்டு  உருவாக்குகிறேன்  பல கனவுகளை  மீதமிருப்பது  நினையாமல் விட்ட சில விழிப்பு மட்டுமே . இன்னும் விருப்பங்கள்  உறுதியாகவில்லை  அதற்குள்ளாக மெல்ல  படரும் கனவுகளுக்கு  நான்  மட்டுமே  பொறுப்பாகிறேன் . வேறுவழி எனக்கு  தெரியாததால்  இதில் உன் பங்கும்  பாதி இருக்கிறது  மன்னிப்பாயாக .                   -வளத்த