Posts

Showing posts from January 2, 2011

என் சுயமுகம்.

எதுவாயினும் என் சுயமுகம்   எனக்கு மட்டுமே அறிமுகம்   மற்றவர்களுக்கு அறிமுகமே நான் ஆனாலும்   என் சுயமுகம் மட்டும் அறிமுகமாவதில்லை   என்னோடு பிறந்து வளர்ந்து காணமல் போகிறது   --------------------------------------------------------------- நண்பனே உன் தன் முனைப்பில் இருந்து  கொஞ்சம் வெளியே வா  உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்  அறிமுகம் இல்லாமல் பேசும் நான் வேறு யாருமல்ல  உன் சுயம் நான் உன் உற்ற நண்பன்  என்னுடனே நீ பிறந்ததில் இருந்து அதிகம் பேசி உள்ளாய்  சில காலமாக நீ என்னை மறந்து விடுவது ஏனோ ? யார் மாறினாலும் நான் மாறாமல் இருப்பதால் அல்லவா  நீ என்னை மறந்து விட்டாய். உன் மனதின் குரலை மீண்டும் கேட்டு பார்  மீண்டும் குழந்தையாக மாறலாம் நாம்  எனக்கும் ஆசை விருப்பு ,கோபம் ,பொறாமை  அனைத்தும் உண்டு என்னை பற்றி கொஞ்சம் யோசி  உன் மனதின் குரலை நீயே கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது  உன்னில் எல்லாவற்றிலும் நானே இருந்தும்  உன்னை தவிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியாதே  முடிந்தால் என்னை விடுதலை பண்ணி விடு  மீண்டும் தனிமை சிறையில் அடைத்து விடாதே  உடைத்து விட்டு வெளியே வந்து உன் சுயரூபம் 

அன்பின் இயல்புகள் வீற்றிருக்க.

வெளி சூழல்களின்   பிடியில் நான்   என்னை   மறந்தவனானேன்   என் இருப்புகளை   பின் தள்ளிவிட்டேன் .. பிரபஞ்ச இயக்கமாய் என் உள்ளங்களில் அன்பின் இயல்புகள் வீற்றிருக்க.. வருந்தும் காரணங்களை கண்டறிவது வீணே என் இயல்புகளில் இருந்து மீறும் தருணத்தில் எல்லாம் முறையிட வந்து விடுகிறது என் தனிமைகள் .. ------------------------------------------------ இறுக்கங்கள் நமக்குள் வந்த நிலையில் பேசுவதற்கு கூட தயக்கம் அதிகமாகிறது வார்த்தைகளுக்கு .. நுண்ணிய சிணுங்கலும் சொல்லும் உன் நிலையை காணமல் நான் தவிக்கிறேன் .. உந்தன் விருப்பங்களே எந்தன் வாழ்வானது -------------------------------------------------- உயிர் நட்புகளில் இருந்த நெருக்கம் அன்பின் மிகுதியில் காணமல் போகிறது நேசங்களின் தன்மை மாறி விட கூடிய எல்லையில் இருந்து கொண்டு கை கொட்டி சிரிக்கிறது பல ஆசைகள் .. என் விருப்பங்கள் அனைத்தும் உனதானது என்றாய் .. இயலாமையால் உன் வெறுப்புகள் அனைத்தும் நானாகிறேன் .. காத்திருக்கும் மவுனங்களை என்ன செய்வது என்று புரியாமல் தனிமையில் நடை பயிலவிட்டேன் ------------------------

நம்பிக்கைகளின் கொடுரங்கள் .

நம்பிக்கைகளின்  கொடுரங்கள்  தொடர்ந்து  கொண்டே தான் இருக்கிறது  அதன் நிலை  மாற்றி கொண்டே  இருக்கும்  நம் நிலையற்ற தன்மையில் .. ----------------------------------------------------------- தோன்றியதெல்லாம்   நமக்கானது என்று   நினைத்திருந்தேன்.. உன் செயலில்   அதையும் நீ   உறுதிப்படுத்துகிறாய் என் இயற்கையே ... வழிகளில் எல்லாம் என் மூலம் பெறப்போகும் உன் வெளிபாடுகளை காண ஆவலின் விளிம்பில் காத்திருப்பாய் .. காலம் கடத்தாமல் உன் விருப்பங்கள் நிறைவேற்றவே என் முயற்சிகளும் செயல்பாடுகளும் முன்னேறுகிறது .. ஏனென்றால் மனதின் சுய பரிசோதனையின் விளைவுகள் வலுபெறுகிறது . ---------------------------------------------------------- உள்ளதன் நினைவுகளை உறுதுணை ஆக்கும் என் பிரிவின் நிமிடங்கள் கனமாய் தாங்குகிறாய்.. உன் வலிகளின் தவிப்புகள் நம் சந்திப்புகளில் கரையும் ஆவலில் என் காத்திருப்பும் நீள்கிறது  ----------------------------------------------------------- அறிதலின் மவுனமாய் என் சலனமும் மிகையாகிறது தனிமையின் விருப்பங்களில் .. எதிர்கொள்கின்ற அன