நம்பிக்கைகளின் கொடுரங்கள் .

நம்பிக்கைகளின் 
கொடுரங்கள் 
தொடர்ந்து 
கொண்டே தான் இருக்கிறது 
அதன் நிலை 
மாற்றி கொண்டே 
இருக்கும்
 நம் நிலையற்ற தன்மையில் ..




-----------------------------------------------------------


தோன்றியதெல்லாம் 
நமக்கானது என்று 
நினைத்திருந்தேன்..
உன் செயலில் 
அதையும் நீ 
உறுதிப்படுத்துகிறாய்
என் இயற்கையே ...
வழிகளில் எல்லாம்
என் மூலம்
பெறப்போகும்
உன் வெளிபாடுகளை
காண ஆவலின்
விளிம்பில்
காத்திருப்பாய் ..
காலம் கடத்தாமல்
உன் விருப்பங்கள்
நிறைவேற்றவே
என் முயற்சிகளும்
செயல்பாடுகளும்
முன்னேறுகிறது ..
ஏனென்றால்
மனதின் சுய
பரிசோதனையின்
விளைவுகள்
வலுபெறுகிறது .





----------------------------------------------------------


உள்ளதன் நினைவுகளை
உறுதுணை ஆக்கும்
என் பிரிவின்
நிமிடங்கள்
கனமாய்
தாங்குகிறாய்..

உன் வலிகளின்
தவிப்புகள்
நம் சந்திப்புகளில்
கரையும்
ஆவலில்
என்
காத்திருப்பும்
நீள்கிறது 

-----------------------------------------------------------


அறிதலின் மவுனமாய்
என் சலனமும்
மிகையாகிறது
தனிமையின்
விருப்பங்களில் ..

எதிர்கொள்கின்ற
அனைத்தும்
இயல்பை மீறுகின்ற
காலமாய்
பின்பற்றப்படுகின்றன..

---------------------------------------------------------------------
புரிதல்கள் கொள்ளாமலே
அன்பு வெறுப்புகளாக
மாறும் வாய்ப்புகளை
பெற்று தருகிறது
உன் கோபங்கள் ..
என் பேச்சுக்களை
அறிமுகம் செய்து விட்டு
முடிவுரையாக மாற்றுகிறாய்
உனக்கான நியாயங்கள்
தொடர்ந்து கிடைத்து
விடுகிறது .

-------------------------------------------------------
                                                - தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு