Posts

Showing posts from February 8, 2011

மறைக்கப்படுபவையாகிறது

என் பலவீனத்தின் பிரதிபலிப்பு  உங்களை வதம் செய்யாமல்  இருக்கவே ஏற்று கொள்பவை  மறைக்கப்படுபவையாகிறது . உங்களுக்கென்றே ஒதுக்கியுள்ள  வாழ்வை நிறைவாக்க  இலட்சிய வீறுநடை புரிய  என் இயல்பின் மூலத்தில்  கொள்முதலாக்குகிறது . செயல் புரிகின்ற  மறு ஆக்கம்  என் வினையினை  சாராமல் இருக்கவே  கற்பிக்கப்படுபவையாகிறது. மிகைமை உடைய  நியாயம் உங்களுக்காகும்  பொழுது என் சிதைக்கப்பட்ட பிரபஞ்ச பெருங்கனவு  விழித்து கொண்டே  இருக்கும் உங்களை  விழுங்க .         - தி.ராஜேஷ்  

காலம் ஆயுத்தமாகுகிறது.

வருமென நானிருந்தேன்  புன்னகையை ஏந்தி கொண்டு  அன்பின் கட்டாயம் செய்திட்டாய்  சாய்க்கும் விழி பார்வையை   எனக்கும் பரிந்துரைக்கிறாய் . ஆவலின் தொகுப்பை  புதிய ஆக்கத்திற்கு  உட்படுத்தும் நியாயம் சிறிதேனும் சேர்க்கப்படுகிறது . பழைய சிந்தனையின்  வன்மம் அங்காங்கே  உருமாறாமல் இருக்க  அதன் இருப்பை  அழித்தொழிய  யாரென்றே அறியாத  உன் மூலமே  சாத்தியமாகும் . எதற்கென்றே அறியாத  இது வரை தோன்றிதடா  எண்ணங்கள் வரையின்றி  நீள்வதின் உண்மையாக்கும்  வருகின்ற வழியின்  துணையாக அகத்தில்  மேலும் ஒளியேற்றப்படுகிறது . பெற்றோரின் மகிழ்வும்  சகோதரர்களின் எதிர்பார்ப்பும்  ஆயா அண்ணியின்  வாழ்த்தும் ஆசியும்  நிலைக்குமென  நண்பர்களும் சுற்றத்தாரும்   நினைப்பதை பூர்த்தி செய்ய  மனதின் புதிய விதை வேருன்ற அன்பின்  செயல்கள் இனிதே  தொடங்க காலம்  ஆயுத்தமாகுகிறது .                           -தி .ராஜேஷ் .