காலம் ஆயுத்தமாகுகிறது.


வருமென நானிருந்தேன் 
புன்னகையை ஏந்தி கொண்டு 
அன்பின் கட்டாயம் செய்திட்டாய் 
சாய்க்கும் விழி பார்வையை  
எனக்கும் பரிந்துரைக்கிறாய் .

ஆவலின் தொகுப்பை 
புதிய ஆக்கத்திற்கு 
உட்படுத்தும் நியாயம்
சிறிதேனும் சேர்க்கப்படுகிறது .

பழைய சிந்தனையின் 
வன்மம் அங்காங்கே 
உருமாறாமல் இருக்க 
அதன் இருப்பை 
அழித்தொழிய 
யாரென்றே அறியாத 
உன் மூலமே 
சாத்தியமாகும் .

எதற்கென்றே அறியாத 
இது வரை தோன்றிதடா 
எண்ணங்கள் வரையின்றி 
நீள்வதின் உண்மையாக்கும் 
வருகின்ற வழியின் 
துணையாக அகத்தில் 
மேலும் ஒளியேற்றப்படுகிறது .


பெற்றோரின் மகிழ்வும் 
சகோதரர்களின் எதிர்பார்ப்பும் 
ஆயா அண்ணியின் 
வாழ்த்தும் ஆசியும் 
நிலைக்குமென 
நண்பர்களும் சுற்றத்தாரும்  
நினைப்பதை பூர்த்தி செய்ய 
மனதின் புதிய விதை
வேருன்ற அன்பின் 
செயல்கள் இனிதே 
தொடங்க காலம் 
ஆயுத்தமாகுகிறது .
                          -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு