அன்பின் இயல்புகள் வீற்றிருக்க.

வெளி சூழல்களின் 
பிடியில் நான் 
என்னை 
மறந்தவனானேன் 
என் இருப்புகளை 
பின் தள்ளிவிட்டேன் ..
பிரபஞ்ச இயக்கமாய்
என் உள்ளங்களில்
அன்பின் இயல்புகள்
வீற்றிருக்க..
வருந்தும் காரணங்களை
கண்டறிவது வீணே
என் இயல்புகளில்
இருந்து மீறும்
தருணத்தில் எல்லாம்
முறையிட வந்து
விடுகிறது என்
தனிமைகள் ..

------------------------------------------------


இறுக்கங்கள் நமக்குள்
வந்த நிலையில்
பேசுவதற்கு கூட
தயக்கம் அதிகமாகிறது
வார்த்தைகளுக்கு ..
நுண்ணிய சிணுங்கலும்
சொல்லும் உன் நிலையை
காணமல் நான் தவிக்கிறேன் ..
உந்தன் விருப்பங்களே
எந்தன் வாழ்வானது

--------------------------------------------------


உயிர் நட்புகளில்
இருந்த நெருக்கம்
அன்பின் மிகுதியில்
காணமல் போகிறது
நேசங்களின் தன்மை
மாறி விட கூடிய
எல்லையில்
இருந்து கொண்டு
கை கொட்டி
சிரிக்கிறது பல
ஆசைகள் ..
என் விருப்பங்கள்
அனைத்தும்
உனதானது என்றாய் ..
இயலாமையால்
உன் வெறுப்புகள்
அனைத்தும்
நானாகிறேன் ..
காத்திருக்கும்
மவுனங்களை
என்ன செய்வது
என்று புரியாமல்
தனிமையில்
நடை பயிலவிட்டேன்

--------------------------------------------------------

உள்ளங்களின்
ஓசைகள்
அதிகமாகிறது
எதையுமே
முடிவெடுக்கமுடியாமல்
தவிக்கிறது
எண்ணங்கள் ...
பற்றுகளின் நேசத்தை
பரிதவிக்கும் நிலையை
உருவாக்கிய சூழ்நிலைகள்
எப்பொழுதும் போல்
வேடிக்கை பார்க்கும்
காலங்கள் ..
எதற்காகவும்
விட்டு கொடுக்காத
கோபங்களும்
நிலையின்றி
நீடிக்கும்
மவுனங்கள்
அனைத்துமே
ரசிக்கிறேன்
அதனதன்
இயல்பில் ..
 
 ------------------------------------------

சொல்வதற்கு
எளிதான
வார்த்தைகளை
உள்ளடக்கிய
நிலையில்லாத
எண்ணத்தின்
வெளிப்பாடுகளின்
அர்த்தம் புரிவதற்குள்
கடந்து விடுகிறது
அனைத்துமே .
----------------------------------------------------

நம் பிறிவு
நிலைகளிலும்
ஊடலின் தன்மை
மிகுதியாகி நம்
நினைவுகளுடன்
பயணிக்கிறது
காலம் ..
மவுனங்களையும்
நேசிக்க கற்று கொள்ள
முடிகிறது என் தனிமைகளில்..
 
-----------------------------------------------------------------------

உன் கோபங்களும்
வெறுப்புகளும்
தவறாக நினைக்கவும்
நான் நேசித்த அன்பு
கருதவதில்லை ...
கருதுகிற நிலைமைகள்
தொடர்ந்து வருவதில்லை
என் பிம்பங்கள்
கானல் நீராகவே
உன்னிடம் தென்படுகிறது ..
குழப்பத்தின் வெளிச்சம்
குறைய தொடங்கியதும்
நம் அன்பு நிலை
என்றும் போல்
நீடித்து நிலைத்திருக்கும்
பிரபஞ்ச சக்தி போல் 
------------------------------------------------------------

எதனாலும்
மறுக்கின்ற
பிடிவாதம்
உன்னுடையது ..
மறுகணமே
உடைந்து போவதும்
நீயே ..
உன்னின்
வியப்புகளை
கேள்விகளாய்
நெருங்குகிறது
விருப்பங்கள் ..
 -----------------------------------------------
                                           -தி .ராஜேஷ் 


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு