பிரபஞ்ச கருவின் உயிர்தெழுதல்

உன் அகாலத்தில்
எங்கள்  அருவும்
கொண்டு உயிர்த்திருந்தாய்.

உன்  இருப்பின் அமைவு
இன்றியும்
உணர்ந்து கொண்டிருக்கிறோம்
கரு இழந்த
பிரபஞ்சத்தில் .

விண்ணகி
விண்ணகன்
என்று முடிவிலியாய்
ஓலமிடுகிறது
நம் மனம் .

நம் கண்ணீரை
ஏந்தி கொள்ள
காலம்
போதாது தான் .

இதனை மீறியும்
ஏற்றுக்கொள்ள
எங்களிடம்
ஏதுமில்லை .

கைவிடப்பட்ட உயிர் கரு
அகாலம் கொண்டு
நம்மை உயிர் கொண்டிருக்கிறது .


நம் பிரபஞ்ச அகாலத்தில்
உன் அருவம்
அதன் அன்பும், நினைவும்
முடிவிலியாய்
என்னென்றும் நிலைத்திருக்கும் .

நம் இழப்பின் வழியே
உயிர்த்தெழும் காலம் .

சென்று வா
விண்ணகி /விண்ணகன்
உன் மரணத்தில் 
மீண்டும்
பிரபஞ்ச கரு உயிர்தெழும் .
                             
                                தி.ராஜேஷ் ,மகாலட்சுமி

Comments

  1. வலைச்சரம் மூலமாக தங்களது வலைப்பூவினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பின் நன்றி நண்பரே .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

சுயம் .