என் சுயமுகம்.

எதுவாயினும் என் சுயமுகம் 
எனக்கு மட்டுமே அறிமுகம் 
மற்றவர்களுக்கு அறிமுகமே நான் ஆனாலும் 
என் சுயமுகம் மட்டும் அறிமுகமாவதில்லை 
என்னோடு பிறந்து வளர்ந்து காணமல் போகிறது 

---------------------------------------------------------------
நண்பனே உன் தன் முனைப்பில் இருந்து 
கொஞ்சம் வெளியே வா 
உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் 
அறிமுகம் இல்லாமல் பேசும் நான் வேறு யாருமல்ல 
உன் சுயம் நான் உன் உற்ற நண்பன் 
என்னுடனே நீ பிறந்ததில் இருந்து அதிகம் பேசி உள்ளாய் 
சில காலமாக நீ என்னை மறந்து விடுவது ஏனோ ?
யார் மாறினாலும் நான் மாறாமல் இருப்பதால் அல்லவா 
நீ என்னை மறந்து விட்டாய்.
உன் மனதின் குரலை மீண்டும் கேட்டு பார் 
மீண்டும் குழந்தையாக மாறலாம் நாம் 
எனக்கும் ஆசை விருப்பு ,கோபம் ,பொறாமை 
அனைத்தும் உண்டு என்னை பற்றி கொஞ்சம் யோசி 
உன் மனதின் குரலை நீயே கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது 
உன்னில் எல்லாவற்றிலும் நானே இருந்தும் 
உன்னை தவிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியாதே 
முடிந்தால் என்னை விடுதலை பண்ணி விடு 
மீண்டும் தனிமை சிறையில் அடைத்து விடாதே 
உடைத்து விட்டு வெளியே வந்து உன் சுயரூபம் 
விலங்காக இருப்பது கண்டு நான் சத்தம் விட்டு நகைப்பேன் 
அப்பொழுது உனக்கு உற்ற நண்பனாக இல்லாமல் 
உன் துரோகத்தின் வெளிப்பாடக நான் மட்டுமே இருப்பேன்.


                                                                                                   -தி .ராஜேஷ் .

Comments

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு