இனி





மிகவும் எளிதானவையாக 
உருவகப்படுத்த முடிகிறது 
நாம் தவறவிட்ட உண்மைகள்
குற்ற உணர்வை அலட்சியம் 
செய்வதை  வாடிக்கையாக  
மாற்றுகின்ற வழித்தோன்றலை 
நியாயப்படுத்த பல தொன்மம் 
அடங்கிய தொகுப்புகள் 
உறங்கி உறைந்து போகிறது 
அதன் வழியே இனி 
உறைந்த நினைவுகளில் 
கரைகிறது நிகழ்வுகள் .

சரியென கொள்வதின் 
பிணைப்பை 
தடை செய்வதாக 
நினைத்து விடுதலை 
செய்து விடுகிறாய் 
அவையாவும் 
வன்மம் கொண்டு 
அங்குமிங்கும் அலைந்து 
தோன்றலின் இருப்பிடத்தை 
நோக்கி பயணிக்கிறது .

தடுக்கின்ற நிலை 
எல்லை மீறி போவதால் 
நமக்காகவே பின்பற்றப்பட்ட 
வழிமுறையின் வினையில் 
நெருங்குதல் எவையென 
உறுதிப்படுத்தி கொண்டால்
பழியை சுமத்த எளிதாகவே 
இருக்கும்
இன்னுமொரு 
தொன்மம் நிறைந்த 
வழிக்காட்டலுக்கு
இருள் சேர்த்தாயிற்று 
இனி பயணப்படுவது 
மட்டுமே செய்யவேண்டியது .

இறுதியாக 
முதலில் தோன்றிய 
அணுக்களின் மிச்சம்  
இன்னுமும் என்னில் 
இருப்பதால் அதன் 
நுண்ணிய அசைவின் 
பெரும்பகுதி இனி நாமவோம் .
                                     -தி .ராஜேஷ் .













Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு