என் அகந்தையின் மிச்சங்கள்.


என் அகந்தையின்
மிச்சங்கள் இன்னும்
உளறிகொண்டிருக்கிறது
தான் மிதிப்படுவது அறியாமல் ..


என் அச்சங்களை
கண்டறிந்து விட்டு
ஏளனம் செய்வது
வாடிக்கையாகி விட்டது
என் முயற்சிகளுக்கு ...

இருந்தும் தொடர்கிறேன்
தோல்விகளின்
பாதைகள் வழியெங்கும்
வெற்றியின் ஆரவாரம்
கேட்கிறது ...

பெறப்போகும்
உயர்வுகள்
என்னை
சிறுமைப்படுதாமல்
நான் பெற்ற
தோல்விகள்
தாங்கி கொள்ளும் ...

                    -தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு