அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .













தன்னை எப்படி 
அடையாளப்படுத்தி கொள்வது 
என்ற சிக்கல் 
அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் 
எப்படியாவது தீர்த்து கொள்வது 
இன்றைய இரவின் பெரும் வேலையாக
இருக்க போகிறது .

ராஜேஷ் என்ற பெயர் 
வைத்த ஆயா இன்று இல்லை 
பிறர் குறிப்பிட்டு கூற 
எதையாவது சொல்  
கிடைத்து விட்டது 
அதன் முறையாகவே 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

உடன் பிறந்த உறவுகள்
பெற்றோர்கள்,நண்பர்கள் ,உறவினர்கள்  
என பல்வேறு 
உறவுமுறை பெயர்களில் 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

பெயர் சேர்ந்து விட்ட 
ஒரு மனித உயிரினம் 
தன்னை உணர்த்தி கொண்டிருக்கும் 
அன்பு ,கோபம் ,வன்மம் ,துரோகம்  ,காமம் 
என பல காரணிகளால் 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

எதையும் பொருட்படுத்தாத 
சுயம் சார்ந்த உணர்வை 
அதன் அனுபவத்தை 
கனவு கண்டு கொண்டிருப்பவன் எனவும்  
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

திருமணம் நிச்சயம் முடிந்த நிலையில் 
இடைப்பட்ட மாதங்கள் 
என் காதலியிடம் காதல் 
செய்து  கொண்டிருப்பவனாக 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .
பின் இது தன் எல்லையை 
விரிவித்து கொள்ளும் .

எப்பொழுது நான் 
நானாகிறேன் .
சுயத்தின் தேடலின்  இயங்குதல் 
நினைக்கின்ற நொடிகளில் 
மட்டும் சுயம் 
உடையவனாக 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

தன் இருப்பை எப்படி 
அடையாளப்படுத்துவது
என்ற குழப்பத்தில் 
யாதுமற்ற செய்கை 
சிந்தித்து கொண்டிருப்பவனாக 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .

எல்லாவற்றையும் விட 
நான் இறந்த பிறகு 
பிரபஞ்ச கனவினை 
சுமந்து கொண்டிருந்தவன் 
ஒருவன் இப்படி தான் 
வாழ்வான் என 
இப்பொழுதே 
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன் .
                                                  வளத்தூர் தி.ராஜேஷ் .














 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை