தோன்றலின் இருப்பிடம்

உறவின் கணத்தலில் 
இலகுவாகிறது உள்ளம் 

போதாமல் நிகழ்கிறது 
நினைவின் இருப்பு 

நெருங்குகின்ற தவிப்பு 
சொல்லாமலே செல்கிறது 

கேட்பதற்கு இல்லாமையால் 
பகிர்வதற்கு  நிறைய இருக்கிறது 

வீட்டின் ஒவ்வொன்றிலும் 
நம் பேச்சுக்கள் கேட்பதற்கு
காத்திருக்கிறது . 


யாவும் என் ஆயாவின் 
தோன்றலின் இருப்பிடம் 
இல்லாமலே பயணிக்கிறது 
என் வாழ்வு .
                                 தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு