பிரபஞ்சத்தின் இயக்கம் .

நினைவுகள் நினைக்கப்படும் 
தொகுப்புகளாக உறைந்து 
உறங்கி கொண்டிருக்கிறது ..

எதை முன்னிலைப்படுத்துவது 
என்பதன் தீர்மானம் எடுக்கும் முடிவு 
சூழ்நிலைகளும் சிந்தனையுமே

தீர்மானிக்கிறது ..

மூன்று காலங்களின் 
கோர்வைகளாக கற்பனையின்
அகழியில் வீழ்ந்து கிடக்கிறது 

நினைவுகள் ..

இழப்புகளின் நினைவுகள் 
இருப்புகளாகவே பதிவு 

செய்து விடுகிறது ..


தொடரும் ஏக்கங்கள் 

தனிமையின் நினைவாக 
உருவாக்கப்படுகிறது ..


நேசங்களின் நினைவுகள் 
மனதின் வலிகளை 

குறைக்கிறது ..

தொடர்ந்து வரும் இன்பங்கள் 
நீடிக்கவே நினைவுகள்

விரும்புகிறது ...

மாற்றமாகி விடுகிறது 
நிகழ் கால நினைவுகள்
கடந்த கால நினைவுகள் 
சாட்சியாகி மட்டுமே 

உறுத்துகிறது 
வரும் கால நினைவுகள் 
கனவுகளாகவே

பார்க்கபடுகிறது ..

அனைத்து நினைவுகளும் 
என் உயிர் பிரபஞ்சத்தின்

 இயக்கத்திற்கு 
அருகிலே பயணிக்கிறது .

                                   -தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு