என் படிமங்கள்

என் படிமங்கள் 
ஒவ்வொன்றாக 
அலங்கரிக்கப்படுகின்றன 
அதன் கட்டமைப்பு 
மிகவும் தொன்மையானவை 
உலகில் தோன்றிய 
முதல்  உயரின் 
மிச்சங்கள் இதிலும் 
இருக்கிறது ..

படிமத்தின் அசைவுகளை 
உன்னிப்பாக கவனிக்கிறேன் 
அவையே என்னை 
தீர்மானிக்கின்றன 
எதை முன்னிலை 
ஆக்குவது என்பதில் 
பெரும் போட்டிகளும் 
போராட்டங்களும் 
நாளும் நடைபெறுகின்ற 
இயல்பாகிறது ...

புதிய படிமங்கள் 
தோன்றுவதில் 
பழையனவை
ஆதங்கம் 
கொள்கின்றன 
தான் இன்னும் 
கீழே செல்கிறோம் 
என்று 
அவை இன்னும் 
தொன்மையாகிறது
என்பதை அறியாமை 
உடையவானகிறது ...

நிறங்களின் தன்மையை 
மேலும் கூட்டுகிறது  
இதன் உருவங்கள் 
பார்பதற்கு இன்னும் 
நிகழ்வு நடைபெறவில்லை 
அதனை நோக்கியே 
முனைப்பும் 
அடிகோலுகிறது ...
                                      -தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு