உன் அன்பின் நிறை .

முற்றும் உன்  நிகழ்வு
தொன்மையின் இயல்பாய்
தொடங்கியது .

முன் நிகழ்ந்த யாவும்
எவ்வித மாறுதலும் இன்றி
இந்த பிரபஞ்சத்தை  தொடர்கிறது .

உயிர் கொண்டிருந்த மூன்று மாத கரு
எப்பொழுதும் மரணம் எய்துவதில்லை
இல்லாமையின் இருப்பில்
உன் நினைவின் அகாலம்
அமரத்துவம் அடைந்த ஒன்று .

விண்ணகி என
மன ஒலி எங்கும்
ஓலமிட்டு கொண்டிருக்கிறது
விண்ணகி இயற்கை
தன் நுண்ணிய பகிர்தலை
அதன் காலத்தில்
ரசித்து கொண்டிருக்கிறது .
நீ வாழ்க விண்ணகி .

விண்ணகி
உன் தொன்மையின்
சிறு நிழலில்
உறங்கி கொண்டிருக்கிறேன்
ஒளியை இன்னும்
நிரப்பி கொண்டிரு
கரைந்து கொண்டிருக்கும் தன் சுயத்தில்
நீயே நிறைந்து கொண்டிருக்கிறாய்
விண்ணகி நீ என் பிரிதொரு பிரபஞ்சம் .


விண்ணகி
என் மவுன அமைவில்
இயங்கி கொண்டிருக்கும்
உன்னிடம் எதுவுமே
கேட்கபோவதில்லை
நம் உணர்தலின் இறுதி
அடைந்து விட்ட ஒன்று .

விண்ணகி
தன்னை மட்டுமே
யாசித்து கொண்டிருப்பவனிடம்
எதுவுமே எஞ்சி இருப்பதில்லை
நீ மட்டுமே சுய உணர்தலாய்
வந்தடைந்தாய் .

உன் இருப்பின் அமைவில்
எனக்காக காத்திரு
விண்ணகி
நம்  காலம்
முடிவிலியால் ஆனது .


                         உன் அன்பின் நிறை .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு